தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

யாழில் படையிரின் சோதனை உச்சகட்டம்! அச்சத்தில் மக்கள்!

மோடியின் குரலுக்கு ஆடிய ஜனாதிபதி:விஜித ஹெரத்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 04:12.03 AM GMT ]
இந்திய மீனவர்களின் மரண தண்டனை சம்பந்தமாக பிரதமர் மோடியின் ஒரு தொலைபேசி அழைப்பால் ஆடிப்போய் விடுதலை செய்த ஜனாதிபதியால் ஏன் இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் கேள்வி எழுப்பினார் .
கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25 வருடங்களுக்கு மேல் எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாது வீணாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யமுடியாது.
அத்தோடு சிறு,சிறு குற்றங்களுக்காவும் பல வருடங்கள் சிறையில் வாடும் இவ்வாறானவர்களை விடுதலை செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லொறி அரசி தேவைப்படுவதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கூறுகின்றர்.
இன்னும் சில நாட்களில் யாழ் சிறையில் உள்ளவர்கள் கூரை மீதேறி போராட்டம் நடாத்தும் நிலை உருவாகும். இன்று நீதித்துறை நீதி அமைச்சின் கீழ் இல்லை அதையும் நிறைவேற்று அதிகாரிமே ஆட்டுவிக்கின்றது என கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfq5.html

மட்டக்களப்பில் பாவனைக்குதவாத பொருட்கள் சுகாதார பரிசோதகர்களினால் மீட்பு
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 03:07.04 AM GMT ]
மனித பாவனைக்கு உதவாத வெங்காயம் விற்பனை செய்த வியாபாரிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மூலம் ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊறணிப்பகுதியில் மரக்கறி விற்பனையாளர்களிடம் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுமார் 400 கிலோ வெங்காயம் மனித பாவனைக்குதவாத முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வெங்காயத்தினை விற்பனைக்கு வைத்திருந்தவர் மீது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆறாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைந்த விலையில் தரம் குறைந்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் இவ்வாறான மோசடி விற்பனைகள் நமது பிரதேசத்தில் அதிகரித்துள்ளதாகவும் இதுதொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாகவும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி பெரிய வெங்காயம் சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிப்பதும், கேடானதுமான காரணங்களினால் இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள கொழும்பை தலைமையகமாக கொண்ட பிரபல விற்பனை நிலையத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பராட்டாக்கள் கொழும்பில் இருந்து புகையிரதம் மூலம் மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு உரிய குளிர் நிலை பேணப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதுடன் விநியோகத்தருக்கு (கொழும்பு கம்பனி) எதிராகவும் விற்பனையாளருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfq4.html
யாழில் படையிரின் சோதனை உச்சகட்டம்! அச்சத்தில் மக்கள்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 02:30.42 AM GMT ]
தமிழீழ மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பதுடன், நேற்றைய  தினம் தொடக்கம் விசேட அதிரடிப் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் உச்சக்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்தில் நவம்பர் மாதம் முழுவதும் அதியுச்ச கெடுபிடிகள் வழக்கமாக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இம்மாதம் தொடர்ச்சியாக சகல இடங்களும் படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அவதானிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று முதல் குடாநாட்டில் அதியுச்சமாக வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு படையினர் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கடந்த வருடத்தைப் போன்று குடாநாட்டின் பல ஆலயங்களுக்குச் சென்ற படையினர் 27ம் திகதி நடைபெறவிருக்கும் அனைத்து பூஜை வழிபாடுகளையும், நிறுத்தவேண்டும் என கூறியிருக்கின்றனர்.
மேலும் இளைஞர்கள் அதிகம் கூடி நிற்கும் சனசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் 27ம் திகதி எவரும் நிற்க கூடாது என புலானாய்வாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றை சுற்றி துவிச்சக்கர வண்டிகளில் பெருமளவு படையினர் உதிரிகளாக களமிறக்கப்பட்டிருப்பதுடன், யாழ்.பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, பலாலி வீதி, சிவனம்மன்கோவிலடி போன்றவற்றிலும் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே விசேட அதிரடிப்படையினரின், சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் 27ம் திகதி இத்தகைய கெடுபிடிகள் இன்னமும் அதிகரிக்கப்படலாம் என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளமையினைக் காண முடிகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfq3.html

Geen opmerkingen:

Een reactie posten