தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

வடமராட்சியில் இராணுவத்தினர் காணி அளவீடு: மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

கொழும்பு - யாழ். தபால் ரயில் சேவை! ஒரு மாதத்தில் ரூபா 17 மில்லியன் வருமானம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:02.37 AM GMT ]
கொழும்பு - யாழ்.  தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 14ம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டணம் 320 ரூபாயாகும். யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் மேலும் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt7.html
மொரிடானிய ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:05.40 AM GMT ]
மொரிடானிய ஜனாதிபதி மொஹம்மத் அவுல்ட் அப்துல் அசீஸ் (Mohamed Ould Abdel Aziz) இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஜீ-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரிஸ்பேர்ன் நகருக்குச் செல்லும் வழியில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஆபிரிக்க ஒன்றியத்தின் 15 நாடுகளுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் அமைச்சரவைத் தீர்மானத்துக்கு ஏற்ப 2012ம் ஆண்டு முதல் மொரிடானியாவுடன் இலங்கை தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
எகிப்திலுள்ள இலங்கைத் தூதரகம் மொரிடானியாவிற்கான தூதரக தொடர்பை பேணி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் மொரிடானியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmuy.html
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை!
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:14.02 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்கட்சிகள் கூட்டணியாக பொதுவேட்பாளரை பெயரிடவிருப்பதாகவும் இந்த பெயர் ஜனாதிபதி தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பே அறிவிக்கப்படும் எனவும் இது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை 14 கைச்சத்திடப்படும் என்றும் இதில் 3 திட்டங்கள் உள்ளடக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
இந்த பொது வேட்பாளர் யார் என்பதை தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பிற்கு பின்பே வெளியிடப்படும் என்றும் தெரியவருகின்றது.
பொது வெட்பாளராக ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வண- மாதுளுவாவே சோபித்த தேரர் ஆகியோரின் பெயர்களில் ஒருவர் தெரிவு செய்யப்படலாமென தெரியவருகின்றது.
அதில் மிக முக்கியமாக சந்திரிக்கா குமாரதுங்கவின் பெயர் தெரிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த பொது வேட்பாளர் சர்வ அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றவே என்றும் 17வது அரசியல் அமைப்பை அமுல்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும் என்றும் சொல்லப்படுகின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம் 19ஆம் திகதிக்கு பின். 
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmuz.html
பொது வேட்பாளர் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசவில்லை!- சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:21.55 AM GMT ]
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்தோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது அணியில் சேர்வது பற்றியோ எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை கூறினார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பான தீர்மானத்தை ஜாதிக ஹெல உறுமய எடுக்கவில்லை.
எனினும் இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றத்தை காணமுடிந்துள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தூய்மையான நாளை அமைப்பே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. அந்த அமைப்பு ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு வெளியில் உள்ள அமைப்பு.
அரசாங்கத்தில் இருந்து விலகுவது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சி எடுக்கும் முடிவு நாட்டுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu0.html
வடமராட்சியில் இராணுவத்தினர் காணி அளவீடு: மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:34.33 AM GMT ]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு முள்ளாஇப் பகுதியில் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்ய சென்ற நில அளவையாளர்கள் பொது மக்களின் எதிர்ப்பால் அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர். 
இன்று காலை நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அந்தக் காணிகளை அளப்பதற்குச் சென்றிருந்தன. எனினும், காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அங்கு கூடியதால் அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.
இதனையடுத்து அந்தப் பணியை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர் அதிகாரிகள். குறித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பெருமளவான பொலிஸாரும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் தெரிவிக்கும் போது,
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத் தேவைக்காக மூன்று பரப்புக்கும் அதிகமான நிலப்பகுதி இராணுவத் தேவைக்காக இன்றைய தினம் குறித்த காணி உரிமையாளருக்கு தெரியாமல் அளவீடு செய்யப்படவிருந்தது.
இதனை அறிந்து தாம் குறித்த பகுதிக்கு இன்று காலை வருகை தந்து பார்த்த போது காணி அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றது. அப்போது குறித்த பகுதியில் கூடிய பொது மக்களும் காணி உரிமையாளரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக காணி அளவீட்டை கைவிட்டு சென்றுள்ளனர்.
இதுவரை காலமும் இராணுவத் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கும் போது உரிய காணி உரிமையாளருக்கு அறிவித்த பின்னரே காணி அளவீடு செய்வது வழக்கம்.
ஆனால் குறித்த கட்டைக்காட்டு முள்ளிப் பகுதி காணி உரிமையாளருக்கு தெரியாமல் அளவீடு செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இராணுவத் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu1.html

Geen opmerkingen:

Een reactie posten