தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இலங்கையிலிருந்து போலி சாட்சியம் - ஹெல உறுமயவின் ஆதரவு அவசியமில்லை!– ஜீ.எல்.பீரிஸ்!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடா்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு போலி சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விஸ்வராசா என்ற நபரை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் செய்யித் ராத் ஹுசைன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில் குறித்த வேண்டுகோள் தொடர்பாகவும், அரசாங்கம் அதனை நிராகரித்தமை குறித்தும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றிருந்தது.
இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையில் இருந்து ஐ.நா.விசாரணைக்குழுவுக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட போலி சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புலிகளின் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இதனைச் சமர்ப்பித்துள்ளனர்.
விஸ்வராசா என்ற நபர் இதனை ஒருங்கிணைத்திருந்தார். அதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான போலியான தகவல்களை வழங்கி, இவர்கள் ஐ.நா. விசாரணைக்குழுவை தவறாக வழிநடத்த முற்படுகின்றார்கள் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட ஹெல உறுமயவின் ஆதரவு அவசியமில்லை – ஜீ.எல்.பீரிஸ்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்; தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி கூட்டமைப்பை விட்டு விலகியதனால் ஜனாதிபதியின் பலம், மலினப்படாது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க முடியும்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிராகரிக்கவில்லை.
35 அம்ச கோரிக்கைகளை கட்சி முன்வைத்துள்ளது. இதில் சில கோரிக்கைகள் மிகவும் ஆழமாக ஆராயப்பட வேண்டியவை.
இதனை அவசர அவசரமாக ஆராய்ந்து பதிலளிக்க முடியாது.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆராயப்பட முடியும்.
போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
எனவே ஜனாதிபதிக்கு தேர்தலில் வெற்றியீட்ட ஜாதிக ஹெல உறுமயவின் உதவி அவசியப்படாது என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYjx3.html

Geen opmerkingen:

Een reactie posten