தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 november 2014

பா ஜ க மீண்டும் தனது விசுவாசத்தை தன எஜமானுக்கு வெளிப்படுத்தி தமிழ் விரோதத்தை உறுதி செய்தது!


பாரதீய ஜனதாக் கட்சி ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 11:24.14 PM GMT ]
இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஜே. அக்பர் , ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருப்பதாக லங்காபுவத் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நீண்ட, ஆயுள் தேகாரோக்கியம் கிடைக்க வாழ்த்துத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய-இலங்கை உறவுகள் மென்மேலும் வலுப்பட வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten