[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 05:51.30 AM GMT ]
குறித்த பிரதேசத்தில் புராதான குகை ஒன்று இருப்பதாக பிரதேச வாசியொருவர் தமக்கு கூறியதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, வெளவால்கள் வாழ்ந்து வரும் குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சிறிய மின் உற்பத்தி செயற்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளா் மேலும் தெரிவித்தார்.
விகாரையில் கும்பம் திருட்டு
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நீக்ரோதாராம விகாரையில் இருந்த கும்பம் ஒன்றை நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் திருடியுள்ளதாக அட்டன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விகாரையின் தேரர் அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அட்டன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlwz.html
சரத் பொன்சேகா: மகாநாயக்கர்கள் சந்திப்பு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 06:12.38 AM GMT ]
முன்னதாக மகாநாயக்கர்களைச் சந்திப்பதற்கு சரத் பொன்சேகா நேற்றைய தினம் வாகன ஊர்வலத்தில் கண்டிக்கு வர ஏற்பாடாகி இருந்தது.
எனினும் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொள்ள மகாநாயக்கர்கள் சென்றிருந்த காரணத்தால் நேற்றைய அவரது பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி வாகன ஊர்வலத்தில் சென்று சரத் பொன்சேகா மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளார்.
இதன்போது தனது குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவர் மகாநாயக்கர்களிடம் முறையிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw0.html
அச்சுவேலி முக்கொலை வழக்கு சந்தேக நபர் தற்கொலை முயற்சி - அக்கரைப்பத்தனையில் பத்து கிலோ போதைப் பொருள் மீட்பு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 06:24.03 AM GMT ]
இவர் நெஞ்சுவலி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்போது வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டிருந்தமை தெரியவந்தது என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
யாழ்.அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் என மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இவர்களை படுகொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தனஞ்செயன் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்று ஊடாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பத்தனையில் பத்து கிலோ போதைப் பொருள் மீட்பு
நுவரெலியா மாவட்டம் அக்கரைப்பத்தனையில் இருந்து பத்தரை கிலோ கிராம் எடை கொண்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட என்.சி. ரகத்தைச் சேர்ந்த போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறிய டின்களில் தலா பதினெட்டு கிராம் எடையில் பொதி செய்யப்பட்டு வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசார் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் ஆண்களுக்கு விற்பனை செய்வதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw1.html
ஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடு என்ன முஸ்லிம் காங்கிரஸிடம் வினவிய ஜே.வி.பி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 06:29.04 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜே.வி.பிக்கும் கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது ஜே.வி.பி இதனை கேட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் ஜே.வி.பியின் சார்பின் அதன் தலைவர் அனுரகுார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதன் போது ஜே.வி.பிக்கு பதிலளித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.
அத்துடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் முடிவுவை அறிவிக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw2.html
Geen opmerkingen:
Een reactie posten