தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

மாவீரர் நாள் அச்சம்! யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் படையினர் நடமாட்டம் அதிகரிப்பு!

சாய்ந்தமருதில் பேருந்துடன் மோதிய இளைஞன் படுகாயம்!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 03:36.39 PM GMT ]
சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள பிரதான வீதியில் இன்று காலை 11 மணியளிவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.சபையின் பேருந்து பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள மஞ்சள் கடவையில் பிரவேசித்த நபருக்காக திடீர் பிரேக் போட்டதும் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த காரைதீவு இளைஞன் பஸ்ஸூடன் மோதுண்டார்.
விபத்தில் படுகாயமுற்ற இளைஞன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfr6.html

மாவீரர் நாள் அச்சம்! யாழ். பல்கலைக்கழக சுற்றாடலில் படையினர் நடமாட்டம் அதிகரிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 02:36.06 PM GMT ]
யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில தினங்களாக பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் நிலைகொண்டுள்ள படையினர் பல்கலைக்கழகத்திற்குள்ளே என்ன நடைபெறுகிறது ஏதாவது கூட்டம் நடைபெறுகிறதா? அல்லது கூட்டமாக மாணவர்கள் என்ன உரையாடுகின்றார்கள்? போன்ற கேள்விகளை விரிவுரைகளை முடித்து வெளியே வரும் மாணவர்களிடம் படையினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையினைத் தொடர்ந்து, இம்முறை யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தினாலேயே படையினரின் நடமாட்டம் பல்கலைக்கழக பகுதிகளில் தற்போதே அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த வருடம் விடுமுறை வழங்கப் போவதில்லை!- துணைவேந்தர்
தமிழீழ மாவீரர் தினத்தை ஒட்டியதாக யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கடந்த சில வருடங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் அவ்வாறான விடுமுறை வழங்கப்படப் போவதில்லை. என பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே துணைவேந்தர் மேற்படி அறிவித்தலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிததுள்ளார்.
விடயம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
மாவீரர் தினத்தை ஒட்டியதாக பல்கலைக்கழக விடுமுறை அறிவிக்கப்படாது. என கூறியிருப்பதுடன், அவ்வாறான விடுமுறை அறிவிக்கப்படாமையினால் பத்திரிகையாளர்களுக்கு அதிகம் வேலைகள் இருக்கும். என சூசகமாக பதில் வழங்கியுள்ளார்.
எனினும் பத்திரிகையாளர்களுக்கு அதிகம் வேலையிருக்கும் என்ற பதிலுக்கு என்ன அர்த்தம் என அறியமுடியவில்லை.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அனை த்து வளாகங்களுக்கும் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கொழும்பிலிருந்து விசேட புலனாய்வு பிரிவு யாழ்.குடநாட்டுக்கு களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் கடந்த முறைகளைப் போன்று இம்முறை மாவீரர் தினத்திற்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்பு இல்லை. என மாணவர்கள் கூறுகின்றனர். 
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfr5.html

Geen opmerkingen:

Een reactie posten