இதனால் இவரை ஊரைவிட்டு துரத்த சிறீஸ்கந்தராஜாவும் - ஜெபநேசனும் முயன்றிருக்கின்றனர். இந்தப் பின்னணியில் வழக்கு தொடரும் நிலையில் வெள்ளாங்குள கிராம சேவகர் ஜெபநேசன் மூலமாக நகுலேஸ்வரனை கொல்லும் பொறுப்பை சிறீஸ்கந்தராஜா ஒப்படைத்துள்ளார் என எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையில் கிராமசேவகர் ஜெபனேசன், பிரதேச செயலர் சிறீஸ்கந்தராசா தவிர நேரடியாக 3பேர் தொடர்புபட்டுள்ளனர். ஒருவர் வெள்ளாங்குளம் மாட்டு கண்ணன் என அழைக்கப்படுபவர். எருமைகளையும் ரக்ரர்களையும் சொந்மாக வைத்திருப்பதனால் இவரை மாட்டுக் கண்ணன் என மக்கள் அழைக்கின்றனர். இரண்டாமவர் மாட்டு கண்ணனின் உழவுயந்திர சாரதி. 3ஆவது நபர் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் புலிகளின் உறுப்பினர். இவர் மதுவுக்கு அடிமையாகி கூலிக்கு எதனையும் செய்வார் - முரடன் கொலைகாரன் என பெயர் பெற்றவர். இவருக்கும் இலங்கைப் புலனாய்வுத் துறைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. இவரே கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர். இவருடன் மாட்டுக் கண்ணனும் அவரது உழவுயந்திர சாரதியும் உடன் சென்றுள்ளார்கள்.
கொல்லப்பட்ட அன்றைய தினம் கிருஸ்ணசாமி நகுலேஸ்வரின் வீட்டின் மீது கல்லெறிந்து உள்ளார்கள். யாரடா என கேட்டவாறு வெளியில் சென்ற கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் மீது முன்னாள் புலி உறுப்பினர் ரீ 56 துப்பாக்கியினால் சுட்டு இருக்கிறார். சூட்டுக்கு இலக்கான நகுலேஸ்வரன் இரத்த வெள்ளத்தில் கிடக்க ரீ 56 துப்பாக்கியை எறிந்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு துப்பாக்கியும் இவர்களிடத்து இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்போ செத்தவரும் முன்னாள் புலி சுட்டவரும் முன்னாள் புலி. இதனால் இந்தக் கொலையை புலிகளுக்கு இடையிலான மோதலாக காட்டுவதற்கு ஒருதரப்பும் - இந்து கிறீஸ்தவ மோதல் எனக் காட்டுவதற்கு இன்னொரு தரப்பும் முயலுவதாக முக்கிய தரப்புகளிடம் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதே வேளை பிரேத பரிசோதனைக்கு சென்ற நீதவான் 'இந்தப் பொடியன் வழக்கொன்றிற்காக சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வரும் பெடியன் அல்லவா' எனக் கேட்டதாக அருகிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் இக்கொலையில், அமைச்சர் ரிஸாத் பதியுதீனும், பசில் ராஜபக்ஷவும், பிரதேச சபை உறுப்பினர் சிறீஸ்காந்தராஜாவும் மற்றும் முக்கிய புள்ளிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் உள்ள தமிழ் நீதிபதிகளாவது கண் விழித்துக்கொள்வார்களா ? தெரியவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1461.html
Geen opmerkingen:
Een reactie posten