தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

சிங்கள மேலாதிக்கவாதி என்ற கருத்துச் சிறையிலிருந்து மஹிந்தவிற்கு விடுதலை: பசீர் சேகுதாவூத்!

கோத்தபாயவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவேன்: மதுமாதவ அரவிந்த
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:48.58 AM GMT ]
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவுடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக கம்பஹா மாவட்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைப்பாளர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடவுள்ளார்.
கோத்தபாயவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன்.
அதுரலிய ரத்தன தேரர் அழுத்தங்களை பிரயோகித்தார். அதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகத் தீர்மானித்தேன்.
ரத்தன தேரரின் சுயலாப அரசியலுக்காக சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பலிகடாவாக்கியுள்ளார்.
நாட்டையும் இனத்தையும் பற்றி பேசக்கூடிய ஆற்றல் அந்த இருவரிடம் மட்டுமே காணப்பட்டது.
எதிர்காலத்தில் பிரதமராக பதவி வகிக்கக்கூடிய தகுதியுடைய சம்பிக்கவை ரத்தன தேரர் வீதியில் இறக்கிவிட்டார்.
ரத்தன தேரர், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒப்பந்தங்களின் அடிப்பைடயில் செயற்பட்டு வருகின்றார்.
தூய்மையான நாளை என்ற அமைப்பின் ஊடாக ரத்தன தேரர் என்ன செய்யப் போகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி போன்றவற்றுடன் ரத்தன தேரர் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.
சிங்கள மக்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நான் கோத்தபாயவுடன் இணைந்து கொள்கின்றேன் என மதுமாதவ அரவிந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu2.html
அநுராதபுரம் வைத்தியசாலையில் பற்றி எரிந்த பேராசிரியர் பிரிவு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:40.05 AM GMT ]
அநுராதபுரம் வைத்தியசாலையின் 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர் பிரிவு என்ற கட்டிடத்திலே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துக் காரணமாக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவு மற்றும் MRI ஸ்கேன் பிரிவு என்பன சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.
அநுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு பிரிவு, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu3.html
அநுராதபுரம் வைத்தியசாலையில் பற்றி எரிந்த பேராசிரியர் பிரிவு
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 03:40.05 AM GMT ]
அநுராதபுரம் வைத்தியசாலையின் 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர் பிரிவு என்ற கட்டிடத்திலே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துக் காரணமாக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவு மற்றும் MRI ஸ்கேன் பிரிவு என்பன சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.
அநுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு பிரிவு, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu3.html

சிங்கள மேலாதிக்கவாதி என்ற கருத்துச் சிறையிலிருந்து மஹிந்தவிற்கு விடுதலை: பசீர் சேகுதாவூத்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 04:54.52 AM GMT ]
அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய என்கின்ற சிங்கள பௌத்த மேலாதிக்கத்தோடு அரசியல் செய்ய விரும்பும் குழு ஒன்று, தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ததாக அறிவித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மேலாதிக்கவாதி என்ற கருத்து சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் கொரிய வைத்திய முகாமை புதன்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
'புதிதாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில், ஜனநாயகவாதியாக இருக்கின்ற இலங்கையில் பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மற்றும் எதிர்காலத்தில் பெறவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கருத்து சிறையிலிருந்து விடுதலை செய்யும் என்று நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய என்கின்ற சிங்கள பௌத்த மேலாதிக்கத்தோடு அரசியல் செய்ய விரும்பும் குழு ஒன்று, தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளது.
இன்று இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலை எடுத்து பார்த்தால், பழைய காலங்களை போல் இல்லை.
சுதந்திரத்திற்கு பின் நீண்டகாலமாக இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் முறுகல்களும் பிரச்சினைகளும் யுத்தமும் பிரிவினைவாதமும் கடந்த 60 வருடங்களாக மேலோங்கியிருந்தன.
கடந்த 30 வருடங்களாக அது வன்முறை அரசியல் வடிமாகவும் அதற்கு முற்பட்ட 30 வருடங்கள் ஜனநாயக செயற்பாட்டு அரசியல் வடிவமாகவும் இடம்பெற்றன.
தமிழ் அரசியலுக்கும் சிங்கள அரசியலுக்கும் இடையில் பிரச்சினை, தமிழ் அரசியலுக்கும் முஸ்லிம் அரசியலுக்கும் பிரச்சினை, சிங்கள அரசியலுக்கும் முஸ்லிம் அரசியலுக்கும் இடையில் பிரச்சினை.
இவ்வாறு இந்த நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு அற்ற தன்மை நீண்டகாலமாக நிலவிவந்தது.
இந்தச் சூழ்நிலை மெல்ல, மெல்ல வேறு வடிவங்களை எடுத்தது.
அண்மைக்காலமாக, ஜனாதிபதித் தேர்தலை அடியொட்டிய சூழ்நிலை மாற்றத்தை ஜாதிக ஹெல உறுமயவினுடைய பதவிகளின் இராஜினாமாவையும் அரசிலிருந்து வெளியேறும் அரசியல் உபாதங்களையும் பார்க்கின்றபோது, சிங்கள மேலாண்மைவாதத்தை இலங்கையில் பின்பற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற குழுக்களுக்கு இடையில் பிரிவினை தோன்றியுள்ளதையே இதன் மூலம் அடையாளமாகக் காணமுடியும்.
ஜாதிக ஹெல உறுமய என்கின்ற மேலாதிக்க சக்தி ஒருவித அரசியலாகவும் இன்னும் அன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரன்ச தலைமையில் நடத்திய கூட்டத்தில் அதில் பங்குபற்றிய சிங்கள மேலாண்மைவாத அமைப்புக்களின் போக்கு ஒருவிதமாகவும் இவை இரண்டுக்கும் ஒவ்வாத வகையில் பொது பல சேனாவின் மேலாண்மை அரசியல்போக்கு வேறுவிதமாகவும் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
இன்று தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலிருந்த பிரிவினை சரியாக ஒற்றுமைப்படாத சூழ்நிலை, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த பிரிவினை முழுமையாக முற்றுப் பெற்று ஒற்றுமைக்கு வராத சூழ்நிலை, முஸ்லிம்களுக்கும் சிங்கள கடும் போக்குவாதிகளுக்கும் இடையில் புதிதாக உருவாகியுள்ள பிரச்சினைகள் முடிவுறாத சூழ்நிலையில் சிங்கள கடும்போக்குவாத மேலாதிக்கவாதிகளுக்குள் ஒரு பெரிய பிரிவினை தோற்றம் பெற்று வருவதையும் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் பார்க்க முடியும்.
இவற்றையே இந்த புதிய சூழ்நிலை எடுத்துக்காட்டுகின்றது. சிறுபான்மை மக்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகப்பெரிய சிங்கள மேலாதிக்கவாதி என்று பிரச்சாரம் செய்யப்பட்டு காட்டப்பட்டுவருகின்ற சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம்.
பொது பல சேனாவின் வெளியேற்றமும் ஜாதிக ஹெல உறுமயவின் இராஜினாமாவும் ஏனைய சிங்கள மேலாண்மை சக்திகளுக்குள் இருக்கின்ற உட்பிரச்சினையும் பிரிவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சிங்கள மேலாதிக்கவாதி என்று காட்டி, அந்த கருத்து சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் சகல மக்களுக்குமான ஜனாதிபதி என்பதையும் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோருக்கும் பொதுவான மனிதர் என்பதையும் மத, மொழி வேறுபாடு அற்ற அடிப்படையில் செயற்படக்கூடியவராகவும் நிரூபிக்கின்ற எதிர்காலம் மலரப்போகின்றது.
நாங்களும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாடு சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு.
ஆனால், இது சிங்கள பௌத்த நாடு என்று சிங்கள கடும்போக்குவாதிகள் கூறுகின்றார்கள்.
சிங்கள பௌத்த நாடு எனக் கூறுவது ஒரு பாசிச கருத்தாகும். இந்த நாடு சிங்கள பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்று சொல்வது யதார்த்தம்.
சிங்கள பௌத்த நாடு என்ற அந்த பாசிச  குறியீடை புறந்தள்ளி, இது சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களை கொண்ட நாடு என்கின்ற ஜனநாயக ரீதியான, யதார்த்தமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அந்தப் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றாக வாழமுடியும் என்ற அரசியல் யதார்தத்தை உருவாக்கும் காலத்தை அடையமுடியுமாக இருந்தால், அதுவே இந்த நாட்டில் வாழ்கின்ற இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் வாழ நாங்கள் தயார் என்று சொல்கின்ற சந்தர்ப்பமாக இருக்கும்' என கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu4.html

Geen opmerkingen:

Een reactie posten