[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 10:20.58 AM GMT ]
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியதாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனையடுத்து, ஏனைய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்த பாரிய செயற்திட்டத்தை ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் அமைப்பு என்பனவற்றுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv4.html
சிறுமியை பலியெடுத்த டிப்பர் வாகனம்: மட்டக்ளப்பில் பரிதாபம்
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 10:56.38 AM GMT ]
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
தனது வீட்டிலிருந்து கிழங்கு வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி மீது டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய ஜெயசித்ரா என்ற சிறுமியே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
டிப்பர் சாரதி ஏறாவூர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv5.html
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மீது இலங்கை அரசு பாய்ச்சல்!
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 09:16.55 AM GMT ]
இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் விடுத்திருந்த கடும் அறிக்கைக்கு பின்னர், அவருக்கு இலங்கை சார்பாகப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பதில் கடிதத்தை, ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநித ரவிநாத் ஆரியசிங்க அனுப்பிவைத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் இவ்வாறான செயற்பாடுகள் ஐ.நாவுடனான ஆக்கபூர்வமான பேச்சுக்களை பாதிக்கும் என்று அந்தக் கடித்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நடத்தும் புலன் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfv2.html
Geen opmerkingen:
Een reactie posten