தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக பாரிய பொதுக்கூட்டம்

ஜனாதிபதி தேர்தல்! எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது: கொமின் தயாசிறி
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 02:30.26 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரினாலும் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மூன்றாம் தடவை தேர்தலில் போட்டியிட முடியும் என சட்ட ரீதியாக தர்க்கம் செய்தவர்களில் கொமின் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்ற போது, எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்கதாகும்.
தற்போதைய ஜனாதிபதியினால் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது.
எந்தவொரு வேட்பாளரினாலும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி போட்டியிட முடியுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியை ஆட்சியில் தக்க வைத்துக் கொள்வதும் நிராகரிப்பதும் மக்கள் கைகளிலேயே உள்ளது.
ஜனாதிபதி ஆளும் கட்சியில் தெரிவு செய்யப்பட்டாலும் அரசாங்க ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் கைப்பற்றக்கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன.
வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்க சாத்தியமில்லை.
எனவே, தேர்தலில் யார் வெற்றியீட்டுவார் என்பது பற்றி உறுதியாக எதிர்வு கூறமுயாதுள்ளது என கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXes3.html
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராக பாரிய பொதுக்கூட்டம்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 02:40.16 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய உட்பட்ட கட்சிகளை இணைந்து இந்தக்கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமையன்று கொழும்பு 2 முத்தையா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து கருத்துரைத்துள்ள மாதுலுவாவே சோபித தேரர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து நாடாளுமன்ற பிரதமர் அதிகாரத்தை ஏற்படுத்துவதற்கு இன்னமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அவகாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் தேவையில்லை என்ற பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஜனாதிபதி செவிமடுப்பாரானால், அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் காரணமாகவே நாட்டில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXes4.html

Geen opmerkingen:

Een reactie posten