[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 06:03.10 AM GMT ]
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மாலக்க சில்வாவை எதிர்வரும் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதி ஒன்றில் வெளிநாட்டு ஜோடி ஒன்றுடன் மாலக்க சில்வா குழுவினர் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலை அடுத்து மாலக்க சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று அமைச்சர் மேர்வின் சில்வாவின் அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய தினம் அனைவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYju1.html
தேர்தல் காலம் நெருங்குவதனால் அரசாங்கம் புலிக்கனவு காண்கிறது!- சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 06:07.09 AM GMT ]
மலேசியாவில் புலிகள் மாநாடு இடம்பெறவும் இல்லை. அதில் புலிகளுக்கு ஆதரவாக பேசப்படவும் இல்லை. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது. கனவிலும் நினைவிலும் புலி முகமே அவர்களுக்குத் தெரிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மலேசிய புலி ஆதரவு மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றுள்ளது. அதேபோல் பொது எதிரணியின் நிகழ்ச்சி நிரல் கூட்டமைப்பினுடையது என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலேசியாவில் நடைபெற்றது புலிகள் மாநாடு அல்ல. அது உலகத் தமிழர்களின் மாநாடு. உலகில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பிலும் பேசப்பட்டதே தவிர விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றியோ பேசப்படவில்லை.
இலங்கை, இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் தமிழர் அமைப்புக்கள் இதில் பங்கேற்றிருந்தன. எனினும் அரசாங்கம் தற்போது புலிக் கனவு காண ஆரம்பித்து விட்டது. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கத்தின் கனவிலும் அவர்களின் சிந்தனைகளிலும் புலிகளின் முகம் மட்டுமே தெரிகின்றது.
தேர்தலில் தனக்கு வெற்றியினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் புலிகளைப் பற்றியும் பயங்கரவாதம் பற்றியுமே பேச வேண்டியுள்ளனர். ஆகவேதான் நாங்கள் எதைப் பேசினாலும் எங்கு சென்றாலும் அரசாங்கத்திற்கு எமது செயற்பாடுகளை புலிகளின் செயற்பாடுகளாக சித்தரிக்கின்றனர்.
தேர்தலில் சிங்கள வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதற்கான தந்திரமே தவிர அரசாங்கத்தின் கருத்துக்கள் எவையும் உண்மை அல்ல.
அதேபோல் பொது எதிரணியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தொடர்புபடுத்தி இனவாதத்திற்கு இந்த அரசாங்கம் அடித்தளம் போடுகின்றது.
தமிழ் மக்களின் ஆதரவு இன்று அரசாங்கத்திற்கும் தேவைப்படுகின்றது. எதிர்க்கட்சிகளுக்கும் தேவைப்படுகின்றது.
அரசாங்கத்தின் வெற்றிக்கு தமிழ் மக்களின் ஆதரவுக் கரம் நீட்டும் போது அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். அப்போது அரசுக்கு புலிகளை தெரியாது.
ஆகவே எதிர்க்கட்சியின் பக்கம் நாங்கள் செயற்பட்டால் எங்களை விமர்சிக்கின்றனர். அப்போது மட்டும் நாங்கள் புலிகளாக இவர்களுக்குத் தெரிகின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இதுவரையில் பொது எதிரணி தொடர்பிலோ அல்லது அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் எவரும் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இல்லை.
எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானங்களை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYju2.html
Geen opmerkingen:
Een reactie posten