[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:21.39 PM GMT ]
தமது யோசனையை அரசாங்கம் நிறைவேற்றாமை காரணமாகவே ஜாதிக ஹெல உறுமய நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டது.
இந்தநிலையில் சிறந்த நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் தாம் அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு கடிதம் அனுப்பி பல மாதங்களாகியும் அரசாங்கத்திடம் இருந்து பதில் இல்லை என்று விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தொடர்பில் தம்மால் எவ்வித பொறுப்புக்களையும் ஏற்கமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் தமக்கு எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை. அவர் நல்ல மனிதர். எனினும் அவரை சுற்றியுள்ளவர்கள் மோசமானவர்களாவர்கள் என்று விஜேசிங்க கூறினார்.
எனினும் தாம் கட்சி மாறப் போவதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.
ஜனாதிபதியை எண்ணி வருந்துகிறேன்!– தேசியப்பட்டியல் பா.உ. ரஜீவ விஜேசிங்க
அரசாங்கம் தனது யோசனைகளுக்கு பதிலளிக்காது போனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை வலுப்படுத்துதல் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை அனுப்பியதாக பேராசிரியரான விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தனது யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உரிய பதிலை வழங்க தவறினால், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க போவதில்லை என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு ஜனாதிபதிக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை. அவர் நல்ல மனிதர். ஆனால் அவரை சுற்றியிருக்கும் கொத்து கொத்தான திருடர்களே பிரச்சினைக்குரியவர்கள்.
ஜனாதிபதியை நினைத்து நான் வருந்துகிறேன் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சிக்கு மாறவிருப்பதாக பரவி வரும் வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
கட்சி தாவ உள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது. நான் எனது நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து விட்டேன். அதில் மாற்றங்கள் இல்லை எனவும் அவர் தெரிவி்துள்ளார்.
ரஜீவ விஜேசிங்க கடந்த சில வருடங்களாக வெளிவிவகார அமைச்சும் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYisz.html
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழுக் கூட்டம் இன்று! ஜனாதிபதி அவசர அழைப்பு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:28.48 PM GMT ]
இதற்கான அழைப்பு இன்று நண்பகல் தொடக்கம் ஜனாதிபதி செயலகத்தின் தொலைபேசி வழியாக விடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று பிற்பகலில் அலரிமாளிகையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின் ஜனாதிபதி செயலகத்தில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்படும் வரை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி கலந்தாலோசனை நடத்தப்படவில்லை.
ஆனாலும் தற்போதைய நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக எழுந்துள்ள சிக்கல்கள், பொதுமக்களின் அதிருப்தி அலை என்பன காரணமாக வெற்றி தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்தே மத்திய குழுவைக் கூட்டி கலந்தாலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கலந்தலோசனைகளின் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis0.html
இராஜதந்திரிகளுக்கு ஜி எல் விளக்கம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:34.47 PM GMT ]
தென்னாபிரிக்க இராஜதந்திரியும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
இதன்போது ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் குறித்து கருத்துக்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
இதேவேளைää நேற்று அமைச்சர் பீரிஸ்ää ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் மீது குற்றச்சாட்;டுக்களை சுமத்தியிருந்தார்.
அவர்ää இரட்டை கொள்கையை கொண்டிருப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
குறித்த விடயத்தில் ஏனைய நாடுகளை போன்று இலங்கை பார்க்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis1.html
இராணுவத்துக்கு காணிகளை விற்க வேண்டாம்! பா.கஜதீபன் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:48.36 PM GMT ]
போர் முடிவுற்று 05 ஆண்டுகளான பின்பும் எமது மக்கள் அகதிகளாக முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக மக்களின் காணிகள் இராணுவத்தினராலும், அரசாங்கத்தினராலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வலி.வடக்குப் பிரதேசம் முற்று முழுதாக அபகரிக்கப்பட உள்ள சூழ்நிலையில், உள்ளூரில் உள்ள படைமுகாம்கள் அமைந்துள்ள காணிகள் அளக்கப்பட்டு, அபகரிக்கும் முயற்சிகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
ஆனால் தமது பூர்வீக வாழ்விடத்தை வழங்க மறுக்கும் மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின் உதவியுடன் காணி அபகரிப்பை போராட்டங்களில் ஈடுபட்டு தடுத்து வருகின்றனர்.
தமது காணியை அரசாங்கத்துக்கோ, படைகளுக்கோ விற்கத்தயார் இல்லை என எழுத்து மூலம் தெரிவித்து வருவதுடன், சிலர் வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம் கலந்தது போல் ஒரு சிலர் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டோ, படையினரதும், அரச அதிகாரிகளினதும் ஆசைப் பேச்சுக்களுக்கு மயங்கியோ அல்லது பயந்தோ தமது பூர்வீக காணிகளை இராணுவ முகாம்களை அமைக்க விற்க சம்மதம் தெரிவித்து வரும் விரும்பத்தகாத அதிர்ச்சி தரும் சம்பவங்களை அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.
அண்மையில் மாதகல் பிரதேசத்தில் இடம்பெற்ற படைமுகாம் அமைப்பிற்கான நில அளவை முயற்சிகளை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்ற போது, அந்த நிலஅளவையாளர், அக்காணிச் சொந்தக்காரரின் சம்மதக் கடித்தை காண்பித்து தமது பணியை மேற்கொண்டுள்ள நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாத அவல நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
ஆகவே எம் உறவுகளே! படையினருக்கான முகாம்களை அமைப்பதற்காக உங்கள் காணிகளை எந்த விதத்திலாவது அரசிடம் விற்க வேண்டாம்.
எமது இனத்தின் எதிர்கால இருப்பைச் சிதைக்கும் வேலைகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும் மிகவும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis2.html
Geen opmerkingen:
Een reactie posten