தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

இனப்படுகொலையில் தடைசெய்யப்பட்ட இராசாயன ஆயுதங்களை பாவித்ததில் இந்திய அரசுக்கும் பங்கு!!


இந்திய அரசின் நேரடி ஆதரவோடு இலங்கை அரசு ஈழ தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையில் தடைசெய்யப்பட்ட இராசாயன ஆயுதங்களை பாவித்ததில் இந்திய அரசுக்கும் பங்குண்டு என்பதை ஆவணப்படுத்தும் காணொளிகள் வெளி வந்துள்ள நிலையில் வாழும் சாட்சியான இந்த உறவை வெளியே விடாது திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்து வதைக்கிறது இந்திய அரசு.
உண்ணா நோன்பிருந்து பின்பு நஞ்சுண்டு தம்மை மாய்க்க நினைத்த திருச்சி சிறப்பு வதை முகாமில் வாழும் உறவில் இந்த சகோதரரும் ஒருவர்… கண் திறந்து பாருங்கள் உறவுகளே..உங்கள் இதயங்கள் திறக்கட்டும்.. பார்த்த கணத்தில் இருந்து இதயம் வலியால் துடிக்கின்றது..
இலங்கையில் முள்ளிவாய்க்கால் உயர் பாதுகாப்பு பகுதியில் நடத்திய இரசாயன தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் இவர் தற்போது இதன் தாக்கத்தால் சொல்லமுடியாத துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகிறார். இவரின் உடல் எரிவு தாங்கமுடியாமல் தினம் தினம் வேதனையை அனுபவித்துவந்து இறுதியாக சாகலாம் என்று முடிவெடுத்து தூக்கமாத்திரை உண்டு இருக்கின்றார் என்றால் அந்த வலியின் கொடுமையை சற்று சிந்தித்து பாருங்கள் உறவுகளே…
யாருக்கோ வந்த வலி என எண்ணாமல் எம் இனத்திற்கு கொடுக்கப்பட்ட வலியை சுமக்கும் இவர்கள் கண்ணீரை உலகம் தான் பார்கிறதில்லை…தமிழ் உறவுகளே நீங்களேனும் பாருங்கள்..தடுத்து நிறுத்த போராடுங்கள்.



Geen opmerkingen:

Een reactie posten