தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

இலங்கை அகதிகளை நாடு திரும்ப கட்டாயப்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன்!

ஜனாதிபதியின் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்ல 610 பஸ்கள்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:25.15 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கனையில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 610 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் இந்த பஸ்களுக்கு செலுத்த வேண்டிய 9 மில்லியன் ரூபா கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 21 பஸ் டிப்போக்களில் மதியம் இரண்டு மணிக்கு இந்த பஸ்களை வழங்க வேண்டும் என மாகாண முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
பஸ்கள் வழங்கப்பட வேண்டிய அரசியல் இணைப்பாளர்களின் பெயர்கள் பஸ்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இடங்கள் போன்ற விபரங்களும் டிப்போ முகாமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பஸ்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் செலுத்துவது தொடர்பில் காணப்படும் தெளிவின்மை காரணமாக பஸ்களை வழங்க சில டிப்போ முகாமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் பஸ்களுக்கான கட்டணங்களை ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையே செலுத்த வேண்டும் எனவும் இன்னும் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும் கட்டாயம் பணத்தை செலுத்துவார்கள் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் (போக்குவரத்து) சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
எனினும் 610 பஸ்களுக்கான கட்டணங்களை செலுத்தப்படுவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt2.html
மங்களவிடம் மன்னிப்புக் கேட்ட டிரான் அலஸ்!
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 08:51.24 AM GMT ]
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச்செய்திகள் அனைத்திற்கும் மூலாதாரமாக மவ்பிம பத்திரிகை  செய்திகளே குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்றிருந்த மங்கள சமரவீர நேற்று அதிகாலை நாடுதிரும்பியவுடன், குறித்த செய்திகள் தொடர்பில் டிரான் அலஸ் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட உதவியாளரைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவுறுத்தலின் பிரகாரம் தான் அவ்வாறான செய்திகளைப் பிரசுரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் மவ்பிம பத்திரிகை அரசாங்கத்தின் விளம்பரங்களின் தயவை நாடியிருக்கும் நிலையில் அவர்கள் கூறுவதை அப்படியே பிரசுரிக்க வேண்டியிருப்பதாகவும் டிரான் அலஸ் தன்னிடம் விளக்கம் அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் மங்கள அரசாங்கத்துடன் இணையப்போவதாக அரசாங்கம் முன்னெடுத்த புரளிக்கு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மங்கள பதிலடி கொடுத்திருந்தார்.
மங்களவுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட பொய்ப் பிரச்சாரம் தற்போது அரசாங்கத்துக்கே பாதகமாக அமைந்துள்ளதாக சிங்கள இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt1.html

வரவு செலவு திட்டத்தில் காணி உரிமையை உள்ளடக்கக் கோரி மக்கள் போராட்டம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 08:24.19 AM GMT ]
மலையக மக்கள் அனைவருக்கும் காணி உரிமையையும், தனி வீடு திட்டத்தையும் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் எனக்கோரி இன்று ஹற்றனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பட்டியை கைகளில் அணிந்து ஸ்டெதன் தோட்ட தொழிலாளிகள் அமைதி போராட்டத்தை மேற்கொண்டார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் தற்போது இல்லை. காரணம் நாங்கள் ஒரு கீழ் மட்டத்தில் தான் வாழ்கின்றோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். அத்தோடு தாங்கள் கஷ்டப்படுவதற்கு பலன் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்
குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலை​யில்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொக்கம் மானிலுவ தோட்ட பகுதியில்  இன்று காலை 10.30 மணியளவில் குளவி கொட்டியதால் தோட்ட தொழிலாளிகள் 7 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு கற்பாறையிலிருந்து குளவி கலைந்து வந்து இவ்வாறு தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் 7 பேரும் பெண் தொழிலாளிகள் என்பதோடு, எவருக்கும் பெரும் பாதிப்பு இல்லையெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt0.html
இலங்கை அகதிகளை நாடு திரும்ப கட்டாயப்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 08:15.28 AM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு இன்றும் கிடைக்கவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இலங்கை அகதிகள் நாடு திரும்ப அச்சமடைகிறார்கள், இலங்கையில் மறுவாழ்வுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம் என வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmtz.html

Geen opmerkingen:

Een reactie posten