தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

ஈழப் போர் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி நூல் வெளியீடு!



முன்னாள் புலி உறுப்பினர் கொலை தொடர்பில் மூவர் கைது
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:02.50 AM GMT ]
மன்னார் கணேசபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மற்றும் கொலையாளிகளுக்கிடையில் நீண்ட நாட்களாக காணித் தகராறு இருந்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட டி-56 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலைக் குற்றவாளிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx5.html



மகிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்! பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: குமார் குணரட்ணம்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:11.03 AM GMT ]
இலங்கையில் ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை, இன்றுள்ள மகிந்த அரசை அழித்து மக்கள் வாழ்க்கையை சுமுகமாக மற்றுவதே எமது நோக்கம் என முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
அத்துடன், பொது வேட்பாளர் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை இதற்கு எம்மிடம் திட்டம் உண்டு என லங்காசிறி வானொலியில் அரசியற்களம் வட்ட மேசையில் குமார் குணரட்ணம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYkx6.html
ஈழப் போர் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி நூல் வெளியீடு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 01:53.44 AM GMT ]
ஈழப் போர் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.
நான்காம் கட்ட ஈழப்போரின் நினைவுக் குறிப்புக்களின் அடிப்படையாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி மற்றும் கடற்படையினரின் போரியல் பங்களிப்பு போன்ற விடயங்கள் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளார்.
தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ச அரங்கில் இன்று இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
அட்மிரால் வசந்த கரன்னாகொட தற்போது இலங்கை இராஜதந்திர சேவையில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjo1.html

Geen opmerkingen:

Een reactie posten