தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

வடமராட்சி கிழக்கில் சுவீகரிப்பு நிலம் அளவீடு உரிமையாளர்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்

அரசாங்க ஆதரவு கூட்டத்தில் அமைச்சர் சம்பிக்க பங்கேற்கவில்லை: ஹெல உறுமய அதிருப்தி
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:34.22 PM GMT ]
நாளை கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்க ஆதரவு கூட்டத்துக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பெயர் பயன்படுத்தப்படுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவான கூட்டம் நாளை சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் ஜாதிக ஹெல உறுமயவின் பிரசார செயலாளர் நிசாந்த வர்ணசிங்க தமது கருத்தில், இந்தக்கூட்டம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கலந்துரையாடப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எனவே சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று வர்ணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரை ஆதரித்து கொழும்பு 2 முத்தையா மைதானத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டவுள்ளன.
இதற்கிடையில் அரசாங்கத்தின் குழு ஒன்று இன்று மாலை ஜாதிக ஹெல உறுமயவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தமது 19வது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகுவது என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று அரசாங்கம் காரணம் கூறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYns6.html
வடமராட்சி கிழக்கில் சுவீகரிப்பு நிலம் அளவீடு உரிமையாளர்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:43.34 PM GMT ]
யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்படையினரின் தேவைகளுக்காக சுமார் 700 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலம் மிக கபடத்தனமான முறையில் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலமைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதுடன், மேற்படி விடயம் தொடர்பில் உடனடியான கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியிருக்கின்றனர்.
 
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 700 ஏக்கர் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிப்புச் சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் சுவீகரிக்கப்படுவதற்கு இவ்வருடத்தின் நடுப்பகுதி தொடக்கம் முயற்சிக்கப்பட்டுவந்தது.
எனினும் மேற்படி முயற்சிக்கு எதிராக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மற்றும் மாகாண விவசாய அமைச்சர், உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து நில அளவீட்டு நடவடிக்கையினை நிறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நிலத்தின் உரிமையாளர்களையும், அரசியல் தலைவர்களையும் ஏமாற்றி கபடத்தனமான முறையில் மேற்படி நிலத்தின் ஒரு பகுதி அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் வேறு ஒரு பகுதியில் நிலம் சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அந்த இடம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கையில், மேற்படி வெற்றிலைக்கேணி பகுதிக்கு நில அளவையாளர்கள் சென்றுள்ளனர்.
அங்கு நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் தாம் அவ்வாறு அளவீடு செய்யவில்லை. என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனையடுத்து நில உரிமையாளர்கள் அங்கி ருந்து விலகி சென்றதும், மீண்டும் வந்து நிலத்தை அளவீடு செய்ததாக தெரியவருகின்றது. ஆனால் இது சட்டத்தினை மீறும் செயல் என தெரியவருகின்றது.
ஒருவருடைய நிலத்தை சுவீகரிப்பதற்கு அவர் தன்னுடைய நிலத்தை அடையாளப்படுத்திக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் நிலத்தின் உரிமையாளர்களை விடுத்து தனியாக நிலத்தை அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYns7.html

Geen opmerkingen:

Een reactie posten