[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:37.10 AM GMT ]
சோபித தேரர் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமைச்சர்கள் டலஸ் அழகபெரும, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மௌபிம பத்திரிகையின் உரிமையாளருமான டிரான் அலஸ் ஏற்பாடு செய்திருந்ததுடன் அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்குமாறு வலியுறுத்தி தூய்மையான நாளை அமைப்பு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னரே சோபித தேரர் அரசாங்கத் தரப்பினருடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே சோபித தேரர் கோட்டே நாக விகாரையில் அரசாங்க தரப்பின் பிரதிநிதிகளை மீண்டும் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதுளுவாவே சோபித தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்து வந்ததுடன் பொது வேட்பாளராக போட்டியிட போவதாக கூறப்பட்ட நபர்களின் முக்கியமானவராக பேசப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp3.html
மனித புதைக்குழியை தோண்ட 93,80,000 தேவை: பொலிசார்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:38.30 AM GMT ]
இந்த அறிக்கையில் இதை தோண்டுவதற்கு ஏற்பாடுகளை செய்ய உரிய தரப்புகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவையென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த மனித புதைகுழியை தோண்டுவது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,பொறியியலாளருமான சிப்லி பாறூக் கடந்த மாதம் 2 திகதி களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்ததற்கு இணங்கவே நீதிவானின் உத்தரவின் பெயரில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.
1990 ஆம் ஆண்டு காத்தான் குடியை சேர்ந்த சிலர் கல்முனைக்கு செல்லும் வழியில் குருக்கள் மடம் பகுதியில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார்கள் இவர்களின் சடலங்கள் குருக்கள் மட பகுதியிலேயே புதைக்கப்பட்டிருப்பதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பரிசீலனை செய்த நீதிவான் இந்த வழக்கை அடுத்தவருடம் ஜனவரி 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp4.html
Geen opmerkingen:
Een reactie posten