ரணில் கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள்: மிரண்டு போயுள்ள மகிந்த ராஜபக்ஷ !
[ Nov 13, 2014 03:08:11 PM | வாசித்தோர் : 1835 ]
நேற்றைய தினம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை நடத்தினார் ரணில். சும்மா ஏதோ கூட்டம் ஒன்றைப் போடுகிறார்கள் என்று மகிந்த அன் கோவினர் அதனை அசட்டையாக விட்டுவிட்டார்கள். ஆனால் இக் கூட்டத்திற்கு சிங்கள மக்கள் அலையென திரண்டு வந்துள்ளார்கள். கடந்த 9 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு கூட்டம் அங்கே திரண்டுள்ளது. இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும் உட்சாகம் அடைந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதேவேளை ஜாதிக ஹெல உரிமைய, சரத்பொன்சேகாவின் கட்சி, மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா என்று பல பிரபலங்கள் இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில் நேற்று திரண்ட கூட்டத்தைப் பார்த்து அலரிமாளிகை ஆடிப்போயுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தர் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களை விட, ரணில் நடத்திய கூட்டத்தில் எவ்வாறு இவ்வளவு மக்கள் கலந்துகொண்டார்கள் என்று மகிந்தர் எண்ணும் அளவு நிலைமை உள்ளது என்கிறார்கள்.
புலிகளின் பொலிஸ் பிரிவில் இருந்த நபரை சிங்கள புலனாய்வுப் பிரிவினர் சுட்டுக்கொன்றனர் !(இணைப்பு 2)
[ Nov 13, 2014 03:16:49 PM | வாசித்தோர் : 2305 ]
இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக சென்ற ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நகுலேஸ்வரனின் மனைவி கவிதா அப்பகுதி பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தக் கொலையினை இலங்கைப் படைப் புலனாய்வாளர்களே மேற்கொண்டதாக அதிர்வின் செய்திகளிற்கு, மன்னாரில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடங்காதவர்களையும் துள்ளித் திரிபவர்களையும் களையெடுக்கும் காலம் நெருங்கிவிட்டதாக அண்மையில் படைப் புலனாய்வாளர்கள், மன்னாரில் முக்கியஸ்த்தர் ஒருவரிடம் உரையாடி இருந்ததாகவும் மேலும் தெரிய வருகிறது.
http://www.athirvu.com/newsdetail/1430.html
Geen opmerkingen:
Een reactie posten