இளம்பெண் தொடர்ந்து மிரட்டி கற்பழிப்பு
அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர், சர்மிளா அவரது நண்பருடன் தனியாக இருப்பதை பார்த்து அங்கு வந்துள்ளார். மேலும் தனது கையில் இருந்த இரும்பு தடியால் சர்மிளாவின் நண்பரை தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த மர்மநபர் சர்மிளாவை மிரட்டி கற்பழித்தாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தை தனது செல்போனிலும் மர்மநபர் படம் பிடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மர்மநபர் சென்று விட்டார். ஆனால் தனக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை சர்மிளா வெளியே யாரிடமும் கூறவில்லை. சில நாட்கள் கழித்து மர்மநபர் சர்மிளாவிடம் செல்போனில் பதிவு செய்த கற்பழிப்பு காட்சியை காட்டி தனது ஆசைக்கு மீண்டும் இணங்காவிட்டால் அந்த காட்சியை வெளியிட்டு விடுவதாக மிரட்டி கற்பழித்துள்ளார்.
பள்ளி வேன் டிரைவர் கைது
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் சர்மிளாவை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் தனது ஆசைக்கு இணங்க வருமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து சர்மிளா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மர்ம நபரை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் சர்மிளாவை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் தனது ஆசைக்கு இணங்க வருமாறு மிரட்டியுள்ளார். இதுகுறித்து சர்மிளா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மர்ம நபரை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
அதன்படி மர்மநபரை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி சர்மிளா மூலம் அழைத்தனர். அதன்படி, மர்மநபர் வந்தபோது, அவரை சர்மிளாவும், அவரது நண்பர்களும் பிடித்து கெங்கேரி போலீசில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்ட நபரின் பெயர் நாகேஷ்(24) என்பதும், பனசங்கரி பகுதியில் பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.jvpnews.com/srilanka/86667.html
கட்டைக்காடு கடற்படை அட்டகாசம் நிறுத்தப்பட்டது…
இது வரை காலமும் இத்தகைய நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான நில அளவைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஓய்வு நிலைக்கு சென்றிருக்கின்றதாவென அண்மையில் வெற்றிலைக்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நில அளவீடு தொடர்பாக ஊடகங்களினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
யாழ்.குடாநாட்டில் படை முகாம்களை அமைப்பதற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை சுவீகரிப்பதற்கேதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அளவீட்டுப்பணிகள் கடந்த 11ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குடாநாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.
எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப்புக்களையடுத்து பல தடவைகள் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் பொதுமக்களது காணிகளை சுவீகரிக்க ஏதுவாக முன்னெடுக்கவிருந்த அளவீட்டு பணிகளே பொதுமக்களுடன் இணைந்து தமிழ் இளம் அரசியல் தரப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக நியமிக்கப்படவிருக்கும் சதீஸ் ஆகியோருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரனும் களம் புகுந்திருந்தார். அவர்களது எதிர்ப்பு போராட்டத்தையடுத்து இன்றைய நில அளவை பணிகள் கைவிடப்பட்டுள்ளது.




http://www.jvpnews.com/srilanka/86670.html
யாழை அதிர வைத்த மாணவன் கொலையில் 10ஆவது சந்தேகநபருக்கும் சிறையில்
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே 10ஆவது சந்தேகநபரான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/86675.html
24 வயதில் 30 திருமணம் செய்த கில்லாடி இளைஞர்
விவாகரத்தான பெண்களை குறிவைத்து தொடர்பு கொண்டார். பின்னர் அவர்களோடு ஊர் சுற்றுவதோடு அவர்களிடம் இருந்து பணம், நகை, விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்களை ‘பரிசாக’ பெற்று திருமணம் செய்து கொள்வார். பின்னர் சிறிது நாட்களி லேயே அந்த பெண்ணிடம் சண்டை போட்டு பிரிந்து சென்று விடுவார் என்று தெரிகிறது. இதேபோன்று சசிகுமார் பெங்களூரு, ஹைதராபாத்தில் 30 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட் டுள்ளது. 700 க்கும் மேற்பட்ட பெண்களை திருமண இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத் அருகே உள்ள ஜூலபல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகினார். அவரது சகோதரிக்கு பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1.5 லட்சம் வாங்கி ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக சகோதரிகள் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தனர். உதவி ஆணையர் ஜெயராம் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் போலீஸார் நேற்று இவருடன் தொடர்புள்ள ஒரு பெண்ணின் உதவியுடன் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் வரவைத்தனர். பின்னர் அவரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரை சேர்ந்த விதவை பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 3 லட்சம் மோசடி செய்துள்ளதும், பெண் நிருபரையும் மோசடி செய் துள்ளதும் உட்பட சசிகுமாரின் பல மோசடிகள் போலீஸ் விசார ணையில் தெரிய வந்தது. இவர் மீது பெங்களூரில் பல்வேறு வழக்கு கள் நிலுவையில் இருந்தாலும் இதுவரை போலீஸில் பிடிபட வில்லை. சசிகுமார் கைது செய்யப் பட்ட தகவலை ஹைதராபாத் போலீஸார் பெங்களூரு போலீஸா ருக்கு தெரிவித்தனர்.
சென்னை போலீஸ் எச்சரிக்கை
சென்னை சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த மோசடி குறித்து கூறியதாவது:
இதுபோன்ற ஆண்களின் வலை யில் கணவனை இழந்த பெண்கள், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவருடன் பிரச்சினை உள்ளவர் கள், வயது கோளாறில் இளம்பெண் கள் சிக்கிக் கொள்கின்றனர்.
பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் தான் ஓர் அனாதை, என்னுடைய அம்மா, அப்பா வெளிநாட்டில் உள்ளனர் என்றே தெரிவிக்கின்றனர்.
அதனால் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது, பையன் வேலை செய்யும் இடம், நண்பர்கள், உறவினர்கள், வீட்டின் அருகே வசிப்பவர்கள் மற்றும் அவரது சொந்த ஊருக்கு சென்று நன்றாக விசாரிக்க வேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/86681.html
Geen opmerkingen:
Een reactie posten