[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 06:39.17 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வதியாதோர் வெளிநாட்டு வங்கி கணக்கின் வட்டி வீதம் குறைந்துள்ளது.
இது நிதியமைச்சுக்குரிய விடயம் அல்ல என்ற போதிலும் வெளிநாட்டில் தொழில் புரிவோர் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் நிதியமைச்சு இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கை பிரஜை சுங்க வரியின்றி வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை செயற்படுத்தும் கட்டமைப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அத்துடன் செயற்படுத்தும் விதம் பற்றியும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms1.html
பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 06:44.52 AM GMT ]
வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வரும் போது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யகட ரங்க என புனைப்பெயரில் அழைக்கப்படும் நபரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms2.html
புஸ்ஸல்லாவையில் கடத்தப்பட்ட இளைஞன் தப்பி வந்து பொலிஸில் முறைப்பாடு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 06:47.28 AM GMT ]
புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு அருகில் பாதையில் சென்று கொண்டிருந்த இளைஞனை கார் ஒன்றில் வந்த மூவர் தாக்கி, காரினுள் போட்டுக் கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதைபார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் இருவர் இரு முறைபாடுகளை 119 க்கு கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த புஸ்ஸல்லாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா நோக்கி செல்லும் பிரதான பாதை உட்பட கிளை பாதைகளான பெரட்டாசி தோட்ட பாதை, மாவெல நாவலபிட்டிய பாதை, கொத்மலை பாதை போன்ற பாதைகளில் பொலிஸார் விரைந்தனர்.
அத்துடன் அந்தந்த பிரதேசங்களில் காணப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு அரண்களுக்கும் அறிவிக்கபட்டது.
ஆனால் சந்தேகத்திற்கு இடமான எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டுவரும் வேளையில், இன்று காலை கடத்தப்பட்ட இளைஞன் தப்பி வந்து புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டம், கிளன்லொக் பிரிவை சேர்ந்த (நோனாதோட்டம்) அருமைநாயகம் ஸ்ரேல் கந்தேகெதர பிரேமவதி அவர்களின் புதல்வன் ருவான் குமாரரஞ்சித் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
இந்தகடத்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞன்,
நான் நுவரெலியாவில் தனியார் முதலாளி ஒருவரிடம் தொழில் புரிந்து வருகின்றேன்.
வேலைக்குச் சென்று ஒரு கிழமைதான். அவரின் லொறியில் உதவியாளராக மரக்கறிகளை நுவரெலியாவிலிருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்வது எனது தொழில்.
நான் ஒரு நாள் லீவில் வீட்டுக்கு வந்தேன். பின் வேலைக்கு செல்ல தாமதமாகி விட்டது. அப்போது அந்த முதலாளி எனக்கு தொலைபேசி மூலம் ஏன் வேலைக்கு வரவில்லை என்று தகாத வார்த்தைகளால் ஏசினார்.
நானும் கோபத்தில் ஏசினேன். பின் அடுத்தநாள் காலையில் வேறு ஒருவரின் தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசி புஸ்ஸல்லாவ நகரத்திற்கு வரச் சொன்னார்கள்.
நான் அங்கு செல்லும் போது, காரில் வந்த 3 பேர் என்னை அடித்து போட்டுக், வாயை கையால் பொத்திபிடித்துக் கொண்டு காரில் கடத்தி சென்றனர்.
நாங்கள் பொலிஸில் சொல்லிவிட்டுத்தான் வந்துள்ளோம். கத்தவேண்டாம். கத்தினால் கொலை செய்வோம். நீ எப்படி போனில் ஏச முடியும். மன்னிப்புக் கேள் நாங்கள் கொலைக்கார்கள்.
எங்களிடம் எல்லா பலமும் இருக்கு. ஆயுதங்களும் இருக்கு என்று கூறி தாக்கினார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரும் பலவாறு ஏசியவுடன் அடிப்பதற்கும் முயற்சித்தனர்.
பின்னர் நான் அணிந்திருந்த சேட்,அவர்கள் அடித்தபோது கிழிந்ததால் இன்னுமெரு சேட்டையும் தந்து, நீ ஓடி போய் விடு, இந்த பிரச்சனை குறித்து எங்கேயும் முறையிடக் கூடாது.
அப்படி நடந்தால் உனக்கு ஆபத்து. நாங்கள் நுவரெலியா சண்டியர்கள் என்று கூறி எச்சரித்தனர்.
நான் அவரை தொவைபேசியில் ஏசியதே இதற்கு காரணமாக இருந்துள்ளது என்று அவ்விளைஞன் தெரிவித்தார்.
தற்போது இந்த பிரச்சினை குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த இளைஞனின் பெற்றோரும் முறைப்படு செய்துள்ளதுடன், தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு முறையான விசாரணை தேவை என்றும் தங்களது மகளின் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms3.html
பொது வேட்பாளர் தெரிவில் இணக்கம் காண்பதில் இழுபறி: நெருக்கடியில் எதிர்க்கட்சிகள்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 07:16.56 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தெரிவு செய்வது இன்னும் காலதாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வேட்பாளர் நேற்று அறிவிக்கப்படவிருந்த போதிலும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தரப்பினரிடையில் இணக்கம் ஏற்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் சிலர் பொது வேட்பாளர் குறித்து சில நிலைப்பாடுகளை கொண்டுள்ளமை, ஜாதிக ஹெல உறும அணித் தலைவர்கள் மத்தியில் காணப்படும் பொது வேட்பாளர் பற்றி நிலைப்பாடுகள், ஜே.வி.பி பொது வேட்பாளரை ஆதரிப்பதா இல்லையா என இன்னும் முடிவு செய்யாமை ஆகியன இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை மேலும் சிலர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.
கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற தூய்மையான நாளை அமைப்பின் பொதுக் கூட்டத்தில் அதன் ஏற்பாட்டாளரான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கலந்து கொண்டபோதிலும் அந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவராக அர்ஜூன ரணதுங்க இருப்பதால், அவரை பொது வேட்பாளராக நிறுத்துவது சிறந்தது என யோசனை முன்வைத்த தரப்பினர் கூறியுள்ளனர்.
அதேவேளை பொது வேட்பாளராக போட்டியிட எவரும் முன்வராது போனால் தானே பொது வேட்பாளராக போட்டியிட போவதாக மாதுளுவாவே சோபித தேரர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முன்னணி அரசியல் முக்கியஸ்தர்கள் சிலர் தனித்தனியாக முயற்சித்து வரும் நிலைமையும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms4.html
ஜாதிக ஹெல உறுமய 18 ஆம் திகதி அரசில் இருந்து வெளியேறுகிறது? நவீன் 19ம் திகதி வெளியேறுகிறார்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 07:34.01 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி சரியான பதிலை வழங்காது போனால் 18 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என அந்த கட்சி முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் என்பதுடன் அவர் பதவியேற்ற தினமுமாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் எப்படியான முனைப்புகளை மேற்கொள்வது என்பது பற்றி அடுத்த 5 நாட்களுக்குள் தீர்மானிக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களுக்கும் இடையில் இன்று முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பிரதிபலன்களுக்கு அமையவே தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா அல்லது நிபந்தனைகளுடன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதா என்பது குறித்து ஜாதிக ஹெல உறுமய நிரந்தர முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் முக்கிய அமைச்சர் அரசிலிருந்து 19ஆம் திகதி விலகுகின்றார்
இந்த அரசில் முக்கிய அமைச்சராகவிருக்கும் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்காவின் மகனும் கருஜயசூரியவின் மருமகனுமாகிய நவீன் திசாநாயக்க அரசில் இருந்து வரும் 19ஆம் திகதி விலகவிருப்பதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms6.html
Geen opmerkingen:
Een reactie posten