தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

ஒன்றுபட துடிக்கும் தமிழினமும்! முரண்பாட்டை ஏற்படுத்தும் தமிழ் தலைமைகளும் - தொடர் 04 !

அரசியல் மேடையை தொழிற்சங்கத்தை வைத்து அரங்கேற்றிய மலையத்தின் தலைமைகள் தொழிற்சங்க வருமானத்துடன் அரசாங்கங்களால் அபிவிருத்திக்கு ஒதுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை....
ஆரம்பத்தில் தோட்டங்களுக்கு சாமி சிலைகள், ஒலிபெருக்கி, நாற்காலிகள், விளக்குகள் என்று தங்களின் கட்சிகளுக்கு ஆதரவான வர்த்தகர்களிடம் விலைக்கு வாங்கி கொடுத்தார்கள், கொடுத்தது போல் கடைகளின் சிட்டை (bill)  பெற்று பணத்தை பகிர்ந்து கொள்ளும் வேலைகளை செய்தார்கள், செய்தும் வருகின்றார்கள். அது தான் வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அடிப்படை உரிமை என்று விளம்பரமும் செய்து வருகின்றார்கள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறிப்பாக தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இவர்களுக்கு வழங்கப் பெற்ற கோட்டாக்களை இவர்கள் தெரிவான பிரதேசத்தில் இருந்து பெயர்களை சிபாரிசு செய்ய சொன்னால் நகர் புறங்களில் வாழும் இளைஞர்களின் பெயர்களை சிபாரிசு செய்து பல இலட்சம் லஞ்சத்தை பெற்றுக் கொள்வார்கள்.
அது மட்டுமா தொடர்ந்து பல ஊழல்கள் இதில் முக்கிய விடயமாக நாம் இங்கு கூறுவது, இன்று அரசியலில் இருக்கும் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் இலங்கை பிரஜைகளாக 1983ம் ஆண்டு வரை இல்லை என்பதும் இவர்கள் 83 கலவரத்தின் போது இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட “அவசரகால பயண கடவுச்சீட்டுகளைப்“ பெற்று (இது ஒருமுறை செல்வதற்கு மாத்திரமே உபயோகிக்க முடியும்) இந்தியா சென்று கடவுச்சீட்டு காணாமல் போய்விட்டதாக காரணம் கூறி அப்போதைய அரசின் செல்வாக்கை பயன்படுத்தி இந்தியாவிலேயே புதிய கடவுச்சீட்டை பெற்று கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.
இலங்கையில் கடவுச்சீட்டு பெற பிரஜா உரிமை பத்திரம் அல்லது வம்சாவளி பிரஜை என்பதை உறுதி செய்ய விண்ணப்பிக்கின்றவரினதும், இவரின் தந்தையின் பிறப்பு சான்றிழும் சமர்ப்பித்து பெற்றுவந்த இந்த பயணச்சீட்டை இந்த விபரங்கள் இல்லாது பெற்றுக்கொண்டார்கள்.
சிலர் இந்திய கடவுச்சீட்டை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் பெற்றவர்களும் இன்று இலங்கை இராஜதந்திரி கடவுச்சீட்டுடன் உலா வருவதாகவும் மலையகத்தில் பரவலாக பேசப்படுகின்றது. (1987 சகலருக்கும் ஓர் சத்திய கடிதம் சமர்பித்தால் பிரஜை என்ற சட்டம் அறிமுகப்படுத்தியதை முழுமையாக இவர்களே பயன்படுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டார்கள்.)
இது இவர்களின் குடும்பம் தமிழ் நாட்டில் சிறப்பான வாழ்க்கை வாழவும் இவர்கள் இங்கு அரசியல் வியாபாரத்தில் ஈடுபடவும் உதவியது. இந்நிலையில் இந்த மலையக தலைமைகளில் பல பேர் அரசியலில் விபச்சாரியாகவே தங்களது பதவிகளை பயன்படுத்தி வருகின்றார்கள்.
இந்தநிலையில் இவர்களின் செயற்பாடுகளுக்கு மலையகத்தின் மக்கள் மத்தியில் பெரிதாக சிந்தித்து செயல்படக்கூடிய அல்லது இவர்களை எதிர்க்கும் பண மற்றும் அரசியல் பலம் இல்லாது பலபேர் ஒதுங்கிக் கொண்டு தங்களின் அலுவலகங்களுடன் அடங்கியிருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை.
அரசியலில் இவர்கள் எந்த நிலை செல்வாக்குகளுடனும் இருந்தாலும் இவர்களின் செயல்பாடுகள், ஊழல் விவகாரங்கள் எல்லாம் அரசு தலைமையிடம் பல கோவைகளாக்கப்பட்டு கையில் இருக்கின்றது என்பது பரவலாக கூறப்படுகின்ற விடயமாகும்.
இந்தநிலையில் இவர்கள் எவ்வாறு வெளி மாவட்டங்களில் உள்ளவர்களை இப்பகுதி மக்களுடன் இணைவதை விரும்புவார்கள்? இவர்கள் உண்மையாக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டிருந்தால் இன்று நுவரெலியா மாவட்டத்தில் எத்தனை உயர் தமிழ் பேசும் அதிகாரிகள் நியமித்திருக்க முடியும்?
பொலிஸ் தலைமை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் நீதித் துறையில் உயர் பதவிகள் அரச வங்கிதுறையில் உயர் பதவிகள் போன்ற நிர்வாக இயந்திரத்தில் பல முக்கிய இடங்களை தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்தால். தமிழ் உயர் அதிகாரிகளை இவர்களால் ஏமாற்றி பிழைக்க முடியாது.
ஆகவே இவர்கள் இருக்கும் பெரும்பான்மை உயர் அதிகாரிகளுக்கு விருந்துகளை ஏற்பாடு செய்வதும் அவர்களுக்கு வேண்டிய விடயங்களுக்கு அனுமதி கொடுத்து இவர்கள் வேலைகளை இலகுவாக செய்வதும் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன என்பது பலரின் கருத்தாகும்.
இந்த நிலையை மாற்ற மலையக இளைய சமுதாயம் வேண்டுவதும் கோருவதும் பிரபாகரன் மலையகத்தில் மீண்டும் உருவாகி இந்த தமிழ் மக்களின் பெயரில் அரசியல் விபச்சாரம் செய்யும் இவர்களை அடக்க வேண்டும் என்பதேயாகும்.
83 கலவரத்தை கூட முதலீட்டாக்கி லாபம் பெற்ற இந்த கீழ்த்தரமான தலைமைகள் இலங்கையின் நீதியின் படி பிரஜா உரிமைக்கான சான்றிதழை சமர்பித்து பெற வேண்டிய அல்லது வம்சாவளியை உறுதிப்படுத்தி பெற வேண்டிய கடவுச்சீட்டை சத்தியக் கடதாசி மூலம் பெற்றுக் கொண்டு முழு இலங்கையின் தமிழர்களையும் ஏமாற்றிய விடயமாகும்.
இன்று இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுள்ள சில மலையகத் தலைமைகள் அல்லது அவர்களின் அடிவருடிகள் அன்று 1983 கலவரத்தின் பின் ரூபாய் 150 க்கு பெற்ற அவசரகால பயண அட்டையை பெற்று இந்தியா கடவுச்சிட்டை மறைத்த துரோகிகளே.
அதேபோல் இந்திய அரசாங்கத்தால் கல்வி புலமைப்பரிசில் திட்டம் தோட்ட தொழிலாளர்களுக்கு என்று அன்றும் இன்றும் உள்ளது. இந்திய உதவி தூதுவர்கள் கண்டி காரியாலயத்தில் தோட்ட தொழிலாளர்களுகளின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய ஊடகங்களில் விளம்பரம் வரும், விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் நேர்முக தேர்வுக்கு விளம்பரம் வரும், ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் மாத்திரம் வர மாட்டாது ஏன்?
இதில் தெரிவு செய்யப்படும் அத்தனை பேரும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருக்கமாட்டார்கள். அனைவருமே வர்த்தகர்களின் பிள்ளைகளாகவும் சிலவேளைகளில் இந்தியாவிலேயே பிறந்து படித்துக் கொண்டு இருக்கும் பிள்ளைகளாகவே இருக்கின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணமாக சில இலங்கை இந்திய மக்களை தொடர்புபடுத்தி அமைந்திருக்கின்ற அமைப்புகளும் அதன் நிர்வாகிகளும் இந்த அரசியல் வாதிகளின் விசுவாசிகள் என்று தோட்ட பகுதியில் இருந்து புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் ஆதங்கமாகும்.
இந்த நிதியத்திற்கு இலங்கையில் ரூபாய் 10.000 நன்கொடை கொடுத்து உயர்கல்வி இந்தியாவில் பெற இந்தியா நாணயப்படி 5 லட்சம் முதல் 19 லட்சம் செலுத்தி பெற வேண்டிய அனுமதியை இந்த அரசியல் வியாபாரிகள் தோட்ட தொழிலாளிகளின் பெயரில் இலங்கை அரசை மாத்திரம் அல்ல இன்றுவரை இந்திய அரசையும் ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றார்கள்.
இந்த நிலையில் இவர்கள் எப்படி ஒன்றுபட இணங்குவார்கள்?
கீழ் கண்ட காரணங்களை தமிழினம் தெளிவாக புரிந்து செயற்படுவார்களானால் வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு என்றாலும் சிறுபான்மை தமிழினம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றே.
அது தான்
பிரச்சினைகள் ஒன்றே
வடக்கில் உரிமையான வீட்டை இழந்துள்ளார்கள்.
மலையகத்தில் 200 வருடமாக இருக்கும் லயக் காம்பிராவில் உரிமை கோர முடியாது.
வடக்கும்,கிழக்கும் உரிமைக்காக எல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கின்றார்கள்.
மலையகம் உணவிற்காக எல்லாவற்றையும் இழக்கின்றார்கள்
வடக்கும்,கிழக்கும் நிலத்தை இழக்கின்றார்கள் உரிமையை பெற மலையகமோ இருக்க இடத்தை பெற எல்லாவற்றையும் இழக்கின்றார்கள்.
வடக்கிலும்,கிழக்கிலும் அகதி வாழ்க்கை ,மலையகத்திலும் அகதி வாழ்க்கை.
அங்கு பாஸ் நடைமுறையை பழகி கொண்டவர்கள் இங்கு பாஸ் முறைக்கு பழகிக்கொண்டிருக்கின்றார்கள்.
குனிந்து தேயிலை செடிகளில் வாழ்க்கையை கடத்தும் இம் மக்களை நிமிர்ந்து நிற்க தமிழின தலைமைகள் உதவவேண்டும்.
வடக்கும்,கிழக்கும் உரிமையை பெற வெளி நாடுகளை நாடுகின்றது,
மலையகத்திலே இருக்கும் வீட்டின் நிலையை மாற்ற வெளி நாடுகளை கோருகின்றார்கள்.
வடக்கும்,கிழக்கு மக்கள் வேலைவாய்ப்பு பெற போராடுகின்றார்கள்.
மலையக மக்கள் பெயரில் வேலைவாய்ப்பு வியாபாரம் செய்கின்றார்கள்.
ஆகவே உண்மை வெளிவர மீரியபெத்த மக்கள் மண்ணோடு மண்ணாகியதை தொடர்ந்து தான் வடக்கு கிழக்கு தலைமைகள் உண்மையான உணர்வுடன் உதவ வந்தார்கள்.  இதிலும் ”கமிசனுக்கு ஆபத்து“ என்ற வருமானத்தை குறிக்கோளாக கொண்ட மலையக தலைமைகள் எப்படி வடக்கு கிழக்குடன் இணைய முடியும்?
ஆகவே தான் இந்த மலையக தலைமைகள் நடாத்துகின்ற ”கீரைக் கடைக்கு எதிர்க்கடை எப்போதும் வேண்டாம்” என்ற கொள்கையை கடைப்பிடிப்பதோடு அதற்கு பாதகமான எந்த செயலுக்கும் எந்த வகையிலும் தங்களது எதிர்ப்பை தொடர்வார்கள்.
தமிழின இளம் தலைமுறையினர், கல்விமான்கள் சமூக நலன்விரும்பிகள் இந்நாட்டில், ஏன் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாம் எல்லோரும் ஒன்றே எதிர் நோக்குகின்ற சவால்களும் ஒன்றே என்ற சிந்தனையுடன் இந்த மலையக விபச்சார அரசியலை நடாத்தும் தலைமைகளை அவர்கள் கொள்ளையடித்ததோடு நிறுத்தி உண்மையாக நம்பும் மக்களை வழிப்படுத்த ஒன்றுபட வேண்டும்.
இன்று மலையக மக்கள் தங்கள் உரிமைகளை கேட்டு வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கையாக மலையக தலைமைகள் எடுத்து கொள்ளுமா? அல்லது அவர்களது கைப்பொம்மையாக காவல்துறை செயற்படுமா? எது எவ்வாறாயினும் தமிழினம் இன்று உணர்வு பூர்வமாக ஒன்றுபட துடிக்கின்றது என்பது உண்மையாகி வருகின்றது.
ஆனால் அரசியல் தலைமைகளோ பாராளுமன்றத்தில் ஒரு கூரையின் கீழ் ஒன்றான அமர்கின்றது. உணவு அருந்துகின்றது, களியாட்டங்களில் ஒன்றிணைகின்றது, மக்களின் பிரச்சினைகளில் மாத்திரம் முரண்பாடு ஏன்? இவர்களின் மன மாற்றமும் மிக மிக அவசியம.
ஒற்றுமையே பலம் என்பதை இந்நாட்டில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள வழிவகிக்க வேண்டும்.
இதுவே இந்த கடடுரையின் நோக்கமாகும்.  உலகம் இப்பொழுது மலையக மக்களையும் பார்க்கத் தொடங்கி விட்டது.
வாழ்க தமிழ்! வளர்க நமது ஒற்றுமை!  ஒழிக சுயநல அரசியல் தலைமைகள்.
முற்றும்
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp0.html

Geen opmerkingen:

Een reactie posten