தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

புல்மோட்டையில் விகாரைக்கு நிலம்

யாழ் ஓஸ்மானில் சந்திரசிறி அட்டகாசம்! அதிபர் OUT

அண்மைக்காலமாக குறித்த பாடசாலையின் கல்வி நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறி தலையிட்ட ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அதிபரை உடனடியாக இடமாற்றஞ் செய்யப்போவதாக அங்கு நடத்திய கூட்டமொன்றில் அறிவித்துமிருந்தார். அதன் படியே தற்போதைய அதிபர் எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரிற்கான பணிகள் ஏதும் ஒதுக்கி வழங்கப்படாது வெறுமனே அமரவைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு பௌதீக வளங்கள் பலவற்றை இழந்த இப்பாடசாலை மீளக்கட்டி எழுப்பப்பட்டு அதிபர் எம்.முபாறக் தலைமையில் 2003 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்களை மீள திரும்பலாமென புலிகள் அறிவித்திருந்ததை அடுத்தே மக்கள் முஸ்லீம் பகுதிகளில் மீள குடியமர தொடங்கியிருந்தனர்.
1990 ம் ஆண்டு கோட்டை முகாம் மீதான புலிகளது தாக்குதலையடுத்து அரச விமானப்படை குறித்த பாடசாலை சூழலிலும் தாக்குதல்களை நடத்தியிருந்தது. அத்துடன் பாடசாலை சூறையாடப்பட்டுமிருந்தது. அவ்வகையில் குறித்த பாடசாலையினை முழுமையாக கடந்த 12 வருடங்களாக கட்டியெழுப்பியவரே இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர் முபாரக் என முஸ்லீம் தரப்புக்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்களையடுத்து அமைச்சர் றிசாத்தின் அடைக்கலத்தில் அவர் பதவியை தக்க வைத்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெருக்கமான சுபியானின் முறைபாடுகளை அடுத்தே றிசாத் பதியுதீனின் ஆதவாளரான தற்போதைய அதிபர் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/80428.html

மகிந்த ஆட்சியில் மலிந்துள்ள துப்பாக்கிகள்

ஜேவிபி யின் பொதுச்செயலாளர் தில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் பிரச்சார பணிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது அச்சத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை குழப்பும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தங்களுடைய கட்சி உறுப்பினர்கள் ஆளும்கட்சி ஆதாரவாளாகள் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/80433.html

புல்மோட்டையில் விகாரைக்கு நிலம்

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிற்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தே விகாரை மற்றும் பன்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை விஸ்தரிக்க ஏதுவாக இன்று அளவைகள் மேற்கொள்ள ஏதுவாகியிருந்தது. நில அளவை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக நில அளவை பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இக்காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமது எதிர்ப்பை தெரிவித்து அப்பகுதி மக்களால் வழமைமறுப்புப் போராட்டம் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80436.html

Geen opmerkingen:

Een reactie posten