தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

எதிரிகளை விட நண்பர்களாலேயே மஹிந்தவுக்கு ஆபத்து! – கொழும்பு ஆங்கில வாரஇதழ் எச்சரிக்கை!

லண்டன் பொருளியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் கட்டுநாயக்கவில் கைது!

இதனையடுத்து கலாநிதி வேணுகோபால் மிரிஹானவில் உள்ள குடிவரவு, குடியகல்வு முகாமுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மிரிஹான முகாமுக்கு சென்று அவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த பணிப்பாளர் கலாநிதி வேணுகோபாலிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கலாநிதி ராஜேஷ் வேணுகோபால், இலங்கையில் மேற்கொள்ளும் ஆய்வுகள், அவரது மேற்பார்வையில் இடம்பெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
லண்டன் பொருளியல் கல்லூரியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவும் இந்திய அரசாங்கமும் அவரது கைது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/80770.html

எதிரிகளை விட நண்பர்களாலேயே மஹிந்தவுக்கு ஆபத்து! – கொழும்பு ஆங்கில வாரஇதழ் எச்சரிக்கை

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தற்போது கொண்டுள்ள நெருக்கம், அயல்நாடுகள் எல்லாமே தம்முடன் உள்ளதாக மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு பாதிப்பை கொண்டு வந்துள்ளது. இதற்கு காரணம் உரிய இராஜதந்திர முனைப்புக்கள் இன்மையாகும். பிழையான ஆட்களை ராஜபக்ச அரசாங்கம் சரியான இடங்களில் நியமித்துள்ளமை காரணமாகவே இலங்கை அரசாங்கம் இராஜதந்திர பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இதன் கட்டமாகவே, பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுடனும் பிரச்சினைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. இவையாவும் ஜனாதிபதியின் நண்பர்களால் அரசாங்கத்துக்கு நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய பாதிப்புக்களாகும் என்று ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80773.html

Geen opmerkingen:

Een reactie posten