[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 04:26.00 PM GMT ]
தாயகத்தில் வாழும் மாணவர்களின் எதிர்காலத்தில் புலம்பெயர் காட்டும் அக்கறையின் வெளிப்பாடாக வடமராட்சி கிழக்கு மாணவர்களுக்கு ஒரு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சூரியா தலைமையில் நடைபெற்றது.
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி, அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வுகளில் அப்பகுதியை சேர்ந்த முன்பள்ளி மற்றும் கிராம அமைப்புக்கள் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இதில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் மாணவர்களுடன் கலந்துரையாடுகையில்,
மனவலிமையும் அதிக உழைப்பும் நிறைந்த கடலோர மக்களின் வாழ்வில், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பெரும் துன்பங்கள் இடையில் வந்தபோதும் அவற்றையெல்லாம் கடந்து மீண்டும் வாழ்வை கட்டியெழுப்பும் முயற்சியில் தங்கள் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாக ஆக்கவேண்டுமென காணும் கனவுகளை உங்கள் முகங்களில் காண முடிகின்றது.
வரலாற்றில் புகழ்பூத்தவர்களை தந்த எமது நெய்தல் நிலம் இன்னும் வரலாற்று படிப்பினைகளை கொண்டு, வரலாற்று மனிதர்களை நிச்சயம் உருவாக்கும்.
நேரான சிந்தனைகளை எப்பொழுதும் கொள்ள வேண்டும். அதை செயலாக்க முனைய வேண்டும். மிகவும் மகிழ்ச்சியான எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மூலதனங்களாக இன்றைய சிறார்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நல்ல வழிகளையும் தேடல்களை காட்ட வேண்டியது நம் எல்லோரதும் கடமையாகின்றது.
புலம்பெயர் சமூகம் எம் மாணவர்கள் மீது அக்கறையாக இருப்பதற்கு இந்த அப்பியாசக் கொப்பிகளும் சான்று. இந்த அப்பியாசக் கொப்பிகளின் அட்டையில் ஊருக்குழைத்த நல்ல தமிழ் பெரியார்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அதை பார்த்து அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வளர்ந்த பாங்குகளை அவர்கள் தாம் பிறந்த சமூக ஆற்றிய நற்காரியங்களை நாம் தேடிப்பார்க்க வேண்டும்.
நீங்கள் நன்றாக படியுங்கள், சாதனைகள் புரியுங்கள் உங்களை நாம் கைபிடித்து உயர்த்திவிடுவோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr0.html
பிலிப்பைன்ஸுடன் இராணுவ உறவு முக்கித்துவம் வாய்ந்தது: இலங்கை
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 04:42.37 PM GMT ]
இலங்கையின் இராணுவ, கடற்படை மற்றும் விமானப் படைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
இதன்போதே இலங்கைக் குழு இந்தக் கருத்தை வலியுறுத்தியது. இலங்கையின் படையினர் குழு பிலிப்பைன்ஸில் உள்ள பல படைத்தளங்களை சென்று பார்வையிட்டனர்
அத்துடன் பிலிப்பைன்ஸின் படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்களுடன் அவர்கள் பேச்சு நடத்தினர் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr1.html
எம்மைப் புறம் தள்ளிவிட்டு அரியாசனம் ஏறமுடியாது: திகாமடுல்ல எம்.பி எச்.எம்.எம்.ஹரீஸ்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 04:53.00 PM GMT ]
தற்பொது அந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்தக் குறைபாட்டினை 2015ம் ஆண்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலம் நிவர்த்தி செய்ய தீர்க்கமான முடிவுகளை கட்சி தலைமைத்துவம் மேற்கொண்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 2014ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று மாலை வித்தியாலய முன்றலில் நடை பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த முப்பது வருடகாலமாக வடக்கு, கிழக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புக்களும் சொல்லில் அடங்காது. இருந்தபோதும் நாங்கள் ஈமான் கொண்டவர்கள் என்பதனால் இறைவனிடத்தில் எம்மை ஒப்படைத்ததனால், எமது ஈமானில் ஒரு துளியளவு மாற்றம் ஏற்படாத காரணத்தினால் எம்மை நசுக்கி பிழிந்தவர்கள் ஒடுக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் எமக்க கிடைத்த பாரிய வெற்றியாகும்.
அது மாத்திரமன்றி இன்று இலங்கையை பொறுத்த மட்டில் தமிழ்போசும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய அதி கூடிய பாதுகாப்பு வலயமாக வடக்கு கிழக்கு மாகணங்கள் உள்ளது.
நாம் அன்று பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புக்களையும் இன்று வடக்கு கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் அனுபவித்து வருவதுடன் நிம்மதியிழந்துள்ளனர்.
அண்மைக்காலத்தில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் போன்ற பல பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும் இதன் பின்னர் எமது கட்சியின் தலைமையும் நாங்களும் களத்தில் நின்று எடுத்தக் கொண்ட பாரிய செயற்பாடுதான். எமது சமுகத்துக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகள் தொடர்பாக உலத்திலுள்ள சகல முஸ்லிம் நாடுகளினதும் ஏனைய சர்வதேச சமூகத்தினதும் சுமார் 40 நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
இதனை இன்று தெளிவாக உணர்ந்த கொண்ட அரசும் அரசின் ஏனைய பங்களிகளும் எம்மோடு நெருக்கமாக உறவை பேணுவதற்கான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
எம்மைப் புறம் தள்ளிவிட்டு ஒருபோதும் இவர்கள் அரியாசனம் ஏறமுடியாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr2.html
Geen opmerkingen:
Een reactie posten