தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம்? - பிரதித்தலைவர் பதவி வழங்கப்படமாட்டாது: ரணில்

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள் உட்பட 208 பவுண் கொள்ளை - திருமண வீட்டில் திருடர்கள் கைவரிசை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:42.41 AM GMT ]
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் பெருந்தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் நேற்று திருமண வைபவம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள் உட்பட 200 பவுண் நகை களவு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு மோப்ப நாய்களுடன் இன்று காலை வந்த பொலிஸார், விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை தென்மராட்சி வதிரிப்பகுதி வீடொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் எட்டு பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தபால் அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது
கொழும்பு கோட்டை தபால் பரிவர்தன பிரிவில் உரிமையாளர்கள் பொறுப்பேற்காத மூன்று பொதிகள் மாற்றப்பட்டமை சம்பந்தமாக 4 அதிகாரிகள் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நேற்று கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தபால் அதிபர், பொதிகள் பிரிவின் பொறுப்பதிகாரி, அலுவலக உதவியாளர், தொழிலாளர் மற்றும் மேலும் நான்கு பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து கடந்த மே மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பொதிகளை, கடந்த 8 ஆம் திகதி வரை உரிமையாளர்கள் வந்து எடுத்துச் செல்லவில்லை.
இதனையடுத்து ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மூன்று பொதிகளை அதிகாரிகள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் காதிதங்கள் மற்றும் கொங்ரீட் துண்டுகள் போடப்பட்டு பொதி செய்யப்பட்டிருந்தது.
இதனால், இது குறித்து வெளிநாட்டு தபால் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே.எச்.எம். சமரசிங்க கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மத்திய தபால் பரிவர்தன நிலையத்தில் சேவையாற்றிய அதிகாரிகள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு இந்த பொதிகளை மாற்றி வேறு பொதிகளுடன் சேர்த்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
விடயம் தொடர்பாக கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo3.html
புதிய மனித உரிமை ஆணையாளர் நாளை கடமையை ஆரம்பிக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 06:02.56 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் இளவரசர் செய்யத் அல் ஹூசைன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளராக ஆறு வருடங்களாக பணியாற்றிய தென் ஆபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
அவரது வெற்றிடத்திற்கே இளவரசர் அல் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அல் ஹூசைன் ஜோர்தான் அரச வம்சத்தை சேர்ந்தவர் என்பதுடன் ஜெனிவாவுக்கான அந்நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo4.html
புதிய மனித உரிமை ஆணையாளர் நாளை கடமையை ஆரம்பிக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 06:02.56 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் இளவரசர் செய்யத் அல் ஹூசைன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளராக ஆறு வருடங்களாக பணியாற்றிய தென் ஆபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
அவரது வெற்றிடத்திற்கே இளவரசர் அல் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அல் ஹூசைன் ஜோர்தான் அரச வம்சத்தை சேர்ந்தவர் என்பதுடன் ஜெனிவாவுக்கான அந்நாட்டின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo4.html
சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம்? - பிரதித்தலைவர் பதவி வழங்கப்படமாட்டாது: ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 06:11.18 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ராஜயோகம் உண்டெனன பிரபல ஜோதிடவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சரத் சந்திர போதலகே என்ற ஜோதிடரே இவ்வாறு ஆரூடம் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கிரக நிலைகள் மோசமாக காணப்படுகின்றன.
இதன் காரணமாகவே தேர்தல்களில் தோல்வி ஏற்படுகின்றது.
எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும்.
மிதுன ராசிக்காரரான சஜித் பிரேமதாசவிற்கு தற்போது ராஜயோகம் காணப்படுகின்றது.
கட்சியில் அதிக அதிர்ஸ்டம் சஜித்திற்கே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
 இதேவேளை சஜித் பிரேமதாசவிற்கு கட்சியின் பிரதித் தலைவர் வழங்கும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மங்களவை கட்சியில் இருந்து நீக்குமாறு ரணிலுக்கு அழுத்தம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்ப்பாடல் பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவதை மங்கள சமரவீர எதிர்த்து வருவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
குறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் கடந்தகாலங்களில் பல தடைவைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று அவசரமாக வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சஜித் பிரேமதாச தற்போது பிரதித் தலைவராக நியமிக்கப்பட மாட்டார்- ஐ.தே.கட்சியின் தகவல்கள்
சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராக நியமிக்கும் யோசனையை சில காலங்களுக்கு ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான பிக்குமார் மற்றும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க, கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் நேற்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றங்களை செய்ய உள்ளதாகவும் வெற்றிடமாக இருக்கும் பிரதித் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான நபர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. சஜித் பிரேமதாசவை அந்த பதவிக்கு நியமிப்பது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அதேபோல் பொருளாளர் பதவிக்கும் வெற்றிடம் நிலவுகிறது. அத்துடன் மேலும் பல திருத்தங்கள் செய்யப்படவிருக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவாக பதில் வழங்கப்படும். செப்டெம்பர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி இது குறித்து முடிவெடுக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சியை தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo5.html

Geen opmerkingen:

Een reactie posten