பழைய காலங்களில் கட்டில் மெத்தைக்கு கீழ் காசை வைப்பது, மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆம் பிரித்தானியாவில் இயங்கிவரும் TAX ஆபிஸ் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்களுக்கும் பிரித்தானிய அரசு ஒரு அங்கிகாரத்தை வழங்கியுள்ளது. அது என்னவென்றால் நீங்கள் தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கூட, அதனை உங்கள் அனுமதியின்றி அவர்களால் பார்க முடியும். இதற்கான சட்டமூல திருத்தத்தை பிரதமர் டேவிட் கமரூன் அங்கிகரித்துள்ளார். குறிப்பாக பல தமிழர்கள் லண்டனில் வணிக நிலையங்களை வைத்துள்ளார்கள். அரசுக்கு அதிக வரியை ஏன் செலுத்தவேண்டும் என்று நினைக்கும் பலர் தமது வருமானத்தை குறைத்து காட்டுவதோடு, அதற்கான வரியையே கட்டுகிறார்கள்.
இதனைக் கண்டு பிடிப்பது என்பது கடினம் தான். ஆனால் எங்கே நாம் பிழை விடுகிறோம் என்றால் எமது வங்கிக் கணக்கில். வங்கியில் கொண்டுபோய் மேலதிக பணத்தை நாம் போட்டால், அப் பணம் வங்கியில் இருப்பதை TAX திணைக்களத்தால் இனி அறிய முடியும். இது அனைவருக்கும் நடக்காது. அதாவது TAX திணைக்களம் யாரை சந்தேகப்படுகிறதோ அவர்களின் வங்கிக் கணக்கையே அவர்கள் நோட்டமிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இனி எவரும் வங்கியில் அளவுக்கு அதிகமாக பணத்தை விட்டுவைக்க மாட்டார்கள். இதனால் தான் வீட்டில் உள்ள கட்டில் மெத்தைக்கு கீழ் தான் இனி பணம் இருக்கும் என்று பிரித்தானிய ஊடகங்கள் கிண்டலடித்துள்ளார்கள்.
ஒரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை அவர் அனுமதியின்றி, நோட்டமிடுவது தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என்று எதிர்கட்சிகள் கூறிவருகிறது. ஆனால் பிரித்தானியாவில் பில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாக, கமரூன் கூறுகிறார். இது இப்படியே தொடர்ந்தால், திறைசேரியில் உள்ள பணம் வற்றிப்போகும் என்று அவர் கூறுகிறார். ஆனால் ஐரோப்பாவில் உள்ளவர்கள் பிரித்தானியா வரலாம் என்று கதவை திறந்த டேவிட் கமரூனால் பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. போலந்து , ரொமேனியா, குரோவெஷியா போன்ற நாடுகளில் இருந்து தற்போது லண்டனுக்குள் வந்து குவியும் ஐரோப்பியர்கள், பெனிஃவிட்டில் இருந்து இலகுவான வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் லண்டனில் கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்கள் பெரும் நெருக்கடியில் உள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/872.html

Geen opmerkingen:
Een reactie posten