தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் காணப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக மாநிலத்தின் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அனைக்கு அருகாமையில் உள்ள கொலத்தூர் என்னும் கிராமத்தில் பாரிய பயிற்சி முகாமொன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980களின் ஆரம்ப காலப்பகுதியில் இந்த ஆயுத பயிற்சி முகாம் காணப்பட்டது. 1984ம் ஆண்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
நவீன ரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்த ஆயுத பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன. தற்பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டதாக அப்போதைய இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாரிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பியற்சி முகாம் கொலத்தூரில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு கலவரத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இவ்வாறு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மக்களின் கடுமையான அழுத்தம் காரணமாக இராணுவ ரீதியாக இந்தியா இலங்கையில் தலையீடு செய்ய நேரிட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தமிழ் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கத் தீர்மானித்திருந்தார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ.ராமசந்திரனும் இந்தத் திட்டத்திற்கு பூரண ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80550.html
Geen opmerkingen:
Een reactie posten