[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 04:06.27 PM GMT ]
இந்த மாநாடு 2013 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட செலவை விட 353.5 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் மேலதிகமாக செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலாவதாக ஒதுக்கிடப்பட்ட செலவினத்தின் அடிப்படையில் இந்த மாநாட்டுக்கு ஒரு பில்லியன் ரூபாய்களே செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது
இந்தநிலையில் மேலதிகமாக செலவிடப்பட்ட நிதிகளை இன்னும் அரசாங்கத்தினால் ஈடு செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவினங்களின் பகுப்பாய்வின்படி- தங்குமிட வசதிகளுக்கு 85 மில்லியன் ரூபாய்கள், பொதுநலவாய வர்த்தக அமர்வு- 90 மில்லியன் ரூபாய்கள், பொதுநலவாய மக்கள் அமர்வு- 95 மில்லியன் ரூபாய்கள், வசதிகளுக்காக- 290 மில்லியன் ரூபாய்கள், தலைவர்களின் மனைவியர்களுக்கான திட்டத்துக்கு- 35 மில்லியன் ரூபாய்கள், விசேட திட்டங்கள்- 75 மில்லியன் ரூபாய்கள், அடையாள அட்டைகள் உட்பட்ட பணிகளுக்காக 850 மில்லியன் ரூபாய்கள், கூட்டங்களுக்கு 145 மில்லியன் ரூபாய்கள், ஏனைய செலவுகளுக்காக 105 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இலங்கை- இந்திய மீனவர் கூட்டுக்குழு நாளை சந்திப்பு
இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை ஆராயும் கூட்டுக்குழு நாளை புதுடில்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரியில் இரண்டு நாடுகளும் இணைக்குழு ஒன்றை அமைத்து மீனவர் பிரச்சினை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான வரைபை மேற்கொள்வது என்று முடிவெடுத்தனர்.
இந்தநிலையில் இதன் முதலாவது கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்படும் என்று இந்திய விவசாய அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா ஏற்கனவே மீன்பிடித் தொடர்பில் வியட்நாம் உட்பட்ட நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளது. எனினும் இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றும் செய்து கொள்ளப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw4.html
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கென்று புதிய தடுப்பு முகாம்கள்!
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 04:12.40 PM GMT ]
குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த முகாம்களை அமைத்துள்ளது.
பூஸாவிலும், நீர்கொழும்பிலும் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிநாட்டவர்களை தடுத்;து வைக்கப்பதற்காக பயன்படுத்தப்படும் மீரிஹன தடுப்பு முகாமில் உரிய வசதிகள் இன்மை காரணமாகவே புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 60 பாகிஸ்தானியர்கள் பூஸா முகாமிலும், நீர்கொழும்பில் 61 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw5.html
வட மாகாணசபையுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் விருப்பம்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 05:07.53 PM GMT ]
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
தாம் திவிநெகும திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணசபையின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகவே செயற்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் வடமாகாணசபையுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த உதவியை பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை வடமாகாணசபை நிர்வாகவே தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திவிநெகும திட்டம், வறுமையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இது எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் குறித்த திட்டத்துக்கு ஆதரவளித்தால் அது வடமாகாண மக்களுக்கே நன்மையளிக்கும் என்று பெசில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் எவ்வித சாட்சியும் இல்லாமல் 50ஆயிரம் ரூபாவை ஒருவர் கடனாக பெறமுடியும். இதற்கு 4 வீத வட்டி அறவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw7.html
Geen opmerkingen:
Een reactie posten