தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

பிரான்சில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது!

விடுதலைக்காக சிறகடிக்கும் புலத்துக்குயில்

மிகவும் இளையவராக இருக்கின்ற இவர் சினிமா மோகத்துக்குள் சிக்குண்டு போகாது தேசத்தின் வலியை சுமந்து தன் குரலால் உரிமைகீதம் பாடிவருகின்றார்.

குறிப்பாக இந்த காலகட்டத்தில் கலைஞர்கள் சினிமாவுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேசவிடுதலை சார்ந்து சிந்திப்பதிலும், பங்களிப்பதிலும் சற்று குறைந்து வருவதை வெக்கத்தோடு பார்க்கின்ற நிலையில் விடுதலைக்காக போராடிவருகின்ற ஒரு இனத்தின் பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்ற எடுத்துக்காட்டாக தன்னை இனம் காட்டியுள்ளார்.
காலத்தின் தேவைகருதி இந்த இளையவரின் பிடரி நிமிர்ந்திருப்பது மற்றய இளையவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எந்த வித ஜயமும் இருக்கமுடியாது.
இந்த இளம் குயிலின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் ஜயா நெடுமாறன் இயக்குனர் கௌதமன் கவிஞர் வ.கருப்பன் இசையமைப்பாளர் வேலன் இயக்குனர் வியய்ராயா ஆகியோருக்கு பாராட்டுக்கள், தொடர்ந்தும் உங்களின் பணி தொடரட்டும்.
http://www.jvpnews.com/srilanka/80747.html

பிரான்சில் லைக்காவின் நடைபாதைக் கடைகள் மற்றும் விளம்பரக்கொட்டகைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது!

நாளை  நடைபெறவிருக்கும் மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் தோ்பவனிக்காக இன்றே அப்பகுதிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. இந்நிலையில் அப்பகுதி வர்த்தகர்கள் பிள்ளையார் பவனி வரும் பாதைகளை அலங்கரிக்கும் வேலைகளை ஆரம்பித்திருந்தவேளையில், லைக்கா மொபைல் நிறுவனமும் லாச்சப்பல் சந்தியில் பொிய கொட்டைகை ஒன்றை அமைத்து தமது விளம்பரங்களை செய்திருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது.
இனந்தொியாத நபர்கள் லைக்கா கொட்டகைக்குள் ஊடுருவித்தாக்கி அங்கிருந்த விளம்பரப்பலகைகள் மற்றும் கொட்டகைகளை பிரித்து எறிந்துள்ளனர். லைக்கா நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லைக்காவின் பணியாளர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இனப்படுகொலையாளி மகிந்தவின் கூட்டாளியான லைக்கா நிறுவனத்துக்கெதிராக பல்வேறு எதிர்ப்புக்கள் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் லைக்காவுக்கெதிரான எதிர்பலைகள் ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
france-attack-lyca-02france-attack-lyca-03

france-attack-lyca-4
http://www.jvpnews.com/srilanka/80740.html

Geen opmerkingen:

Een reactie posten