[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 02:42.40 AM GMT ]
வடக்கின் குடாநாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயம் அண்மையில் அமெரிக்காவின் செய்மதி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆங்கில செய்தி இதழ் ஒன்று இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசசார்ப்பற்ற அமைப்பு ஒன்றின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதானம் மற்றும் நீதி என்ற அடிப்படையில் செயற்படும் இந்த அமைப்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனால் இலங்கை தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்த யஸ்மின் சூக்கா மற்றும் மை டோட்டர் தெ ரெரரிஸ்ட் என்ற படத்தை தயாரித்த நோர்வேஜிய தயாரிப்பாளர் பீட் ஆர்னெஸ்டெட் ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைதவிர, பேராசிரியர் அடெல் பார்கர், இலங்கைக்கான முன்னாள் உதவி உயர்ஸ்தானிகர் புருஸ் ஹை, செய்தியாளர் டி திஸ்ஸநாயகம் ஆகியோரும் இந்த அரசசார்பற்ற அமைப்பில் அங்கம் வகிப்பதாக நாளிதழ் கூறியுள்ளது.
குறித்த செய்மதி அமெரிக்கன் எசோசியேசன் எட்வான்ஸ்மென்ட் ஒப் சயன்ஸ் என்ற நிறுவத்தினால் காங்ககேசன்துறை மற்றும் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கண்காணிக்கும் வகையில் செயற்படுத்தப்படுவதாக நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் 2009 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய அரச சார்பற்ற அமைப்பினால் முன்கொண்டு செல்லப்படுகிறது.
காங்கேசன்துறை மற்றும் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்து விஸ்தரிக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ஏற்கனவே 2009ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற காலத்திலும் அமெரிக்கா, வன்னி போர்க்கள செய்மதி படங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதென்று நாளிதழ் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns6.html
விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கிய முகாம் கொளத்தூரில் இயங்கியதாம்? தோண்ட தோண்ட வெடிகுண்டுகள்!
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 02:51.16 AM GMT ]
மேட்டுர் அணையில் இருந்து 11 கிலோமீற்றர் தூரத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்து. இதில் விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1984 ஆம் ஆண்டு முதல் இந்த முகாம் இயங்கி வந்தது. 1983 இலங்கையின் இன வன்முறையின் பின்னர் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பணிப்பின்பேரில் இலங்கையின் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1984 ஆம் ஆண்டு முதல் இந்த முகாம் இயங்கி வந்தது. 1983 இலங்கையின் இன வன்முறையின் பின்னர் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பணிப்பின்பேரில் இலங்கையின் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதற்கு அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆரும் தமது முழுமை ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் கொளத்தூர் முகாமில் விடுதலைப் புலிகளுக்கு தற்பாதுகாப்பு பயிற்சிகளே வழங்கப்பட்டதாக இந்திய படையினர் தெரிவித்ததாக தெ ஹிந்து கூறியுள்ளது.
இலங்கையின் தமிழ் போராளிகளுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேஸ் ஆகிய இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சேலம் அருகே தோண்ட, தோண்ட வெடிகுண்டுகள்: விடுதலைப் புலிகள் பதுக்கியதா?
சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை பதுக்கியவர்கள் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர் அருகேயுள்ள பச்சைமலை காப்பு காட்டில் மரக்கன்றுகள் நடுவதற்காக வனத்துறையினர் பொக்லைன் மூலம் குழிகள் தோண்டினர். அப்போது ஒரு இடத்தில் பழைய இரும்பு பரல் ஒன்று தென்பட்டது. அந்த பரலை உடைத்து பார்த்த போது, ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதிரிப்பாகங்கள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் என பயங்கர ஆயுதங்கள் 3 பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த கொளத்தூர் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலும், சில இடங்களில் தோண்டிய போது, ஆயுத குவியல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகள், உளவுத்துறை பொலிஸார் ஆயுதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த இரும்பு பரலில் எல்.டி.டி. என்று எழுதப்பட்டிருந்தது. அவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தி இரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு விடுதலைப் புலிகள் முகாமிட்டு போர் பயிற்சிகள் பெற்றனர். அப்போது இந்த வெடிகுண்டுகளை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வனப்பகுதியில் ஏற்கனவே பதுங்கியிருந்த சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கும்பலும் நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தனர். எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வீரப்பனுக்கு அடைக்கலம் கொடுத்த மாவோயிஸ்டுகள் மீண்டும் அந்த பகுதிகளில் ஊடுருவக்கூடும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஆயுத குவியல் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொலிஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறும்போது, ‘‘வனப்பகுதியில் கிடைத்த கையெறி குண்டுகள், வெடிகுண்டு ஆகியவற்றை பரிசோதனை பிரிவினர் ஆய்வு நடத்தி உள்ளனர். அந்த ஆய்வில் இந்த குண்டுகள் 20 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதை பதுக்கியது சந்தன கடத்தல் வீரப்பனா?, விடுதலைப் புலிகளா? அல்லது நக்சல் அமைப்புகளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns7.html
Geen opmerkingen:
Een reactie posten