தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

காணாமல் போனோரை நினைவுகூர பொலிஸார் தடை

ஊவா மாகாணத்தில் எந்த பீதியும் இல்லை!-சிறிபால டி சில்வா - அரசாங்கம் வன்முறையை தூண்டுகிறது!- திஸ்ஸ
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 10:41.33 AM GMT ]
எதிர்க்கட்சிகள் கூறுவது போல் ஊவா மாகாணத்தில் எந்த பீதியும் பயங்கரமும் இல்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர மாகாணத்தில் அமைதியான நிலைமை காணப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊவாவில் வெற்றி பெறும். அந்த வெற்றியை கௌரவமாக பெறவேண்டும் என்பதே ஆளும் கட்சியின் நோக்கம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஊவா மாகாணத்தில் வன்முறை, பீதி ஏற்பட்டுள்ளதாக சில தரப்பினர் மேற்கொண்டு வரும் பிரசாரங்களில் எந்த உண்மையுமில்லை.
சகல கட்சிகளும் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் சூழல் காணப்படுகிறது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வன்முறையை தூண்டி வருகிறது - திஸ்ஸ அத்தநாயக்க
அரசாங்கம் ஊவா மாகாணத்தில் தேர்தல் பீதியை ஏற்படுத்தி வருவதால், அங்கு வாழும் மக்கள் கடும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், பீதியையும் வன்முறையையும் ஏவி தேர்தலில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார பணிகளுக்கு அரச வாகனங்கள், வளங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெருமளவில் பயன்படுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் வெளியிடங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான நபர்கள், ஊவா மாகாணத்திற்கு வந்து எதிர்க்கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmvy.html

காணாமல் போனோரை நினைவுகூர பொலிஸார் தடை
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 11:11.07 AM GMT ]
காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தினத்தை முன்னிட்டு வவுனியா நகரில் நடைபெற்ற பேரணியை, கூட்டம் நடைபெறவிருந்த வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்திற்கு செல்ல விடாமல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் பேரணி மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு இல்லாத சட்டம், அப்பாவி பிள்ளைகளுக்காக பெற்றோர் நடத்தும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எப்படி அமுல்படுத்தப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள்,  நகர சபை மைதானத்திற்குள் செல்ல பொலிஸார் இடமளிக்கவில்லை என்பதால், அவர்கள் பிரதான வீதியில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmvz.html

Geen opmerkingen:

Een reactie posten