[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:22.10 AM GMT ]
கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் ஷில்போதயம்-2014 தேசிய கைப்பணி கண்காட்சியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று பார்வையிட்டார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றது.
தேசிய அருங்கலைகள் பேரவை, பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம் ஆகிய நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் ஆக்கப் பொருட்களின் காட்சி கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, கைத்தொழில் அபிவிருத்திசபைத் தலைவர் நாவாஸ் ரஜாப்தீன், தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்தி சேன, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் மார்ஷல் ஜனதா, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் நவாஸ் ரஜாப்தீன், வடகடல் நிறுவனத் தலைவர் திஸவீரசிங்க உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கடந்த 28ம் திகதி ஆரம்பமான இக்கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், இக்கண்காட்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUloy.html
கிளிநொச்சியில் பாடசாலை அதிபர்கள் மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணையின் பின் விடுதலை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:26.39 AM GMT ]
கிளிநொச்சிப் பகுதியிலுள்ள பாடசாலைகளின் முகவரிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட உயிர்ப்பதிவு என்னும் புத்தகம் தொடர்பிலேயே மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த புத்தகம் கத்தோலிக்க மதகுரு ஒருவரினால் அச்சிட்டு வெளியிடப்பட்டதாகவும், இதன் பிரதியினை பாடசாலைகள் விடுமுறை என்பதால் தாங்கள் இன்னும் படிக்கவில்லை எனவும் கூறிய அதிபர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அதிபர்களை உடன் விடுவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUloz.html
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:24.10 AM GMT ]
கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் இந்த அரசாங்கத்தின் பயணம் தொடரும்.
அபிவிருத்தியின் பயன்கள் அனைவராலும் அனுபவிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
முழு உலகையே வெற்றிகொள்ளக் கூடிய இளைஞர் சமூகமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo1.html
தமிழ் - முஸ்லிம்களின் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த தீர்மானம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:24.21 AM GMT ]
எதிர்வரும் நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரையில் வவுனியாவில் நடைபெறவுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது.
யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மை கட்சிகளின் பொது வேட்பாளராக சீ.வீ.விக்னேஸ்வரனை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா அல்லது ஏதேனும் ஓர் கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்திய விஜயத்தின் பின்னர் பொது வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo2.html
Geen opmerkingen:
Een reactie posten