அப்போது அவர் பேசியதாவது,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 31 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. 69 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம், திரிபுரா என பல மாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. இங்கு பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள். எனவே இந்த வெற்றியை கண்டு பா.ஜனதா மிதப்பில் இருந்தாலும் நாம் மலைத்து விடக்கூடாது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் 15 முறை இந்திய மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்து பிறகு விடுதலை செய்துள்ளது.
மீனவர்களின் படகை கைப்பற்றியுள்ளது. முன்பு நரேந்திர மோடி பேசும் போது இலங்கை ஒரு குட்டி தீவு இந்தியாவிடம் வாலாட்டுகிறது என்றும் மத்தியில் முதுகெலும்பு இல்லாத அரசு இருக்கிறது என்றும் பேசினார். இப்போது அவரால் ஏன் அவர்களை தடுக்க முடியவில்லை, இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். அட படுதோல்வி அடைந்தது மட்டும் அல்லாமல் எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்து போயுள்ள காங்கிரஸ், திமிர் இன்னும் குறையவில்லை போல இருக்கே ? நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடையும் என முதலிலேயே தெரிந்துகொண்ட சிதம்பரம், அதில் போட்டியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
http://www.athirvu.com/newsdetail/900.html
Geen opmerkingen:
Een reactie posten