இவர் இப்படியாம் ! அவர் அப்படியாம் ! என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லையே ? SORRY WHAT DO THEY MEAN ?
[ Aug 30, 2014 05:44:02 AM | வாசித்தோர் : 5650 ]
நாங்கள் நரேந்திர மோடியோடு பேசியதில் இருந்து, மகிந்தருக்கு குலப்பன் காச்சல் பிடித்துவிட்டது என்றும், அதுதான் அவர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒப்பில்லா தலைவர் சம்பந்தர் ஐயா தெரிவித்துள்ளார். அது மட்டுமா ? தமிழர்களுக்கு நீதி கிடைக்க நரேந்திர மோடி செயலில் இறங்க ஆரம்பித்துவிட்டார். அவர் ஏற்கனவே அதில் இறங்கிவிட்டார்(ஏதோ கடலில் இறங்கியதுபோல) என்கிறார் சம்பந்தர். இவ்வாறு சம்பந்தர் கூறிக்கொண்டு இருக்க மறு முனையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வில்(27) கலந்து கொண்டு உரையாற்றும் போதுதான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் காணமுடிகின்றது. இலங்கை மக்களினது தேவைகளுக்கேற்பவே இந்திய அரசு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு(அதாவது மகிந்தரின் அரசுடன்) தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயல்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தான் இந்தியாவின் விரும்பம் என்கிறார் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா !
ஆனால் நாங்கள் இந்தியா சென்றுவிட்டோம், மோடியை சந்தித்துவிட்டோம் இனி என்ன நடக்கப்போகிறது பாருங்கள் என்று, நிலவுக்கு சென்று இறங்கிய நீல் ஆம்ஸ்ராங் குதித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் குதிக்கிறார். உண்மையில் என்ன தான் நடக்கிறது ? நடிகர் மேஜர் சுந்தரராஜன் போல ... What do they mean ?????????????? என்று கேட்டால்... சாரி இது மீன்(mean) இல்ல கருவாடு !
http://www.athirvu.com/newsdetail/895.html

Geen opmerkingen:
Een reactie posten