பிரபஞ்ச அழகு ராணி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இலங்கை வந்துள்ள 15 சீன அழகிகள் இலங்கையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலன்நறுவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு வரலாற்று சிறப்புமிக்க வழிப்பாட்டுத் தலங்களில் திரைப்படம் ஒன்றை ஒளிப்பதிவு செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை தொல்பொருள் திணைக்களம் மற்றும் கலாசார முக்கோண அமைப்பு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் படப்பிடிப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், திரைப்படம் ஒன்றின் காட்சிகளை படமாக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் தேசிய மரபுரிமைகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து தேசிய மரபுரிமைகள் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலன்நறுவை பராக்கிரமபாகு அரச மண்டபத்திற்கு மேல் அரை நிர்வாணமாக சீன அழகிகள் ஏறி நடித்ததுடன் அவர்களுடன் சென்ற படப்பிடிப்பு குழுவினர் அவற்றை படமாக்கியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten