தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

ராஜபக்ச ஐ.நா. மன்றத்தில் உரையாற்றுவதை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம்: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

ராஜபக்ச குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள மிதக்கும் சந்தை!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 08:56.37 AM GMT ]
கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதியை திறந்து வைக்கும் விடயம் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கண்காணிப்பின் கீழ் இந்த வர்த்தக நிலைய தொகுதியின் திறப்பு விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி வர்த்தக நிலைய தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 22 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்ததுடன், ஜனாதிபதி வெளிநாடு சென்றதால் அது ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் திடீரென கடந்த 25 ஆம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பும் வரை திறப்பு விழா நிகழ்வை ஒத்திவைக்காமை தொடர்பில் அரசியல் துறையில் பேசப்பட்டு வருகிறது.
குறித்த திறப்பு விழாவில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரம் கலந்து கொண்டார். சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அதில் கலந்து கொள்ளவில்லை.
ராஜபக்ஷ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை என இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்ச ஐ.நா. மன்றத்தில் உரையாற்றுவதை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம்: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 08:44.49 AM GMT ]
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா. மன்றத்தில் உரையாற்றுவதை தடுத்து நிறுத்தக் கோரி நாளை போராட்டம் நடத்தப் போவதாக  நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்,
தமிழ் உறவுகள் இனப்படுகொலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
ராஜபக்சே ஐ.நா. மன்றத்தில் உரையாற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்த வேண்டும்
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை நிர்வாகி சி.தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu2.html



Geen opmerkingen:

Een reactie posten