தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!

சீனாவிற்கான விமான பயணங்கள் அதிகரிக்கப்படும்!- ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:36.24 AM GMT ]
சீனாவிற்கான விமானப் பயணங்கள் அதிகரிக்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் 15 உப நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உப நகரங்களில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விரைவில் எந்தெந்த நகரங்களில் விமான சேவைகளை நடாத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
தற்போது சீனாவின் நான்கு நகரங்களுக்கு வாரமொன்றில் 15 விமானப் பயணங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேற்கொள்கின்றது.
இலங்கையின் பிரதான சுற்றுலா சந்தைகளில் ஒன்றாக சீனா அடையாளம் காணப்பட்டுள்ளது என திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms0.html
ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:48.22 AM GMT ]
இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிரா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பிவிட்டனர்.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழகத்தில் இன்னும் தங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அது பரிசீலனையில் இருக்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.
எனினும் ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் அவர்கள் வேறு எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இனப்பிரச்சினையில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் காட்டிய தீவிர பங்களிப்புக்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேரடியான பங்களிப்பை வழங்கவில்லை.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவமே இதற்கு காரணமாக இருந்தது.
திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரையில் அது இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில் தமது செல்வாக்கை பயன்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடக ஒரு போர்நிறுத்தத்தை கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் மீண்டும் இந்தப்பிரச்சினையில் தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும். மற்றும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கு ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் அவசியமானது என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பினர் ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளை வரை கூட்டமைப்பினர் தமிழகத்தில் தங்கியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms1.html
இலங்கை கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி 4வது நாளாகவும் தொடர்கிறது!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:58.22 AM GMT ]
இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகில் தமது விசைப்படகு மூழ்கியநிலையில் நடுக்கடலில் காணாமல் போயுள்ள மூன்று தமிழக மீனவர்களையும் தேடும் பணிகள் நான்காவது நாளாக இடம்பெற்று வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற நான்கு பேரே காணாமல் போயுள்ளனர்.
இந்த விசைப்படகில் ஜோன்கென்னடி (50) டேனியல் (20) வில்சன் (19) எஸ்ரோன் (19) ஆகிய நான்கு மீனவர்கள் சம்பவத்தின்போது இருந்துள்ளனர்.
எனினும் ஜோன் கென்னடி என்பவர் உள்ளுர் மீனவர்களால் மீட்கப்பட்டார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஜோன் கென்னடி என்ற மீனவரை மீட்புக்குழு மீனவர்கள் மீட்டு பாம்பனுக்கு கொண்டு வந்தனர்.
ஏனைய மூன்று மீனவர்களை தேடும் பணியில் 30 மீனவர்கள் அடங்கிய மீட்பு குழு மூன்று படகுகளில் நான்காவது நாளாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளை மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபடவில்லை என்பதை கண்டித்து கடந்த புதன்கிழமை பாம்பன் பாலம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படையின் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டிருந்தால் மூன்று மீனவர்களையும் காப்பாற்றி இருக்க முடியும்.
இந்தநிலையில் காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களுக்கும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு என்று மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms2.html

Geen opmerkingen:

Een reactie posten