இழுவைப் படகுகளை பயன்படுத்த அனுமதிகோரும் வடமாகாண மீனவர்கள்- பா.ஜ.க துரோகம் செய்துவிட்டதெனக் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 01:11.22 PM GMT ]
வடமாகாண சபையிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெ ஹிந்து தெரிவிக்கிறது.
வல்வெட்டித்துறை மீனவர்கள் வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பி.டெனீஸ்வரனை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் காரணமாக தமக்கு நட்டமேற்படுகிறது.
எனவே அதனை சீர்செய்து கொள்வதற்காக தமக்கு இழுவைப் படகு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையில் இழுவைப் படகு உட்பட்ட 18 மீன்பிடி உத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இழுவைப் படகுகளுக்கு அனுமதியளிக்க முடியாது என்று அமைச்சர் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கடல் வளத்தை அழிக்கும் என்பதாலும் சிறுதொகையினரே இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு பா.ஜ.க துரோகம் செய்துவிட்டதெனக் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் அரசைப் போலவே பாரதிய ஜனதாக் கட்சியும் துரோகமிழைத்து வருவதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
புதுக்கோட்டை நேற்று சனிக்கிழமை மாவட்ட அமைப்பாளர் க.சி. விடுதலைக்குமரன் தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் போர்க்குற்றவாளியாக நிற்கும் ராஜபக்ச அரசு, இந்திய, தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி கைது செய்வது, படகுகளைக் கைப்பற்றுவது போன்ற அராஜகங்களை தொடர்ந்து செய்கிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி அரசு, முந்தைய மன்மோகன் சிங் அரசின் பாதையிலே சென்று இலங்கைக்கு சாதகமான அணுகு முறையையே தொடரும் செயல் தேர்தல் நேரத்தில் பாஜக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு துரோகமிழைத்துள்ளது.
எனவே, மத்திய அரசு இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன் பிடித்தொழிலுக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq2.html
ஜனாதிபதி மஹிந்தவை பாதுகாக்க முன்வாருங்கள்: உயர்கல்வி அமைச்சர் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 01:25.51 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊவாவில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த கோரிக்கையை அவர் விடுத்தார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு இன்று மற்றுமொரு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் செயற்படும் சில குழுக்கள் மற்றுமொரு போரைக் கொண்டு முயற்சிக்கின்றன.
சில சக்திமிக்க நாடுகளும் இந்த முயற்சிகளுக்கு ஊக்கமளித்து சமாதானத்தை குலைக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.
எனவே இலங்கை மக்கள், அரசாங்கம் இக்கட்டான நிலையில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று எஸ்.பி திஸாநாயக்க கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq3.html
தமிழ்மொழி பயிற்சி பெற்ற 1600 படையினருக்கு சான்றிதழ் வழங்கிய யாழ். பல்கலை. துணைவேந்தர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:14.45 PM GMT ]
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கலந்துகொண்டுள்ளமை தழிம் சமூகத்தையும் கல்வி சமூகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே பல்கலை மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் அச்சுறுத்தும் பாணியில் படையினர் செயற்பட்டு வருவது தெரிந்ததே.
ஆயினும் இதன் போதெல்லாம் படைத்தரப்பின் நடவடிக்கைக்கு பல்கலை. துணைவேந்தர் ஆதரவாக இருந்து வந்துள்ளார்.
அவரே மாணவர்கள் மீதான வன்முறைக்கு துணை போகிறார் என பல்கலை. மாணவர் சமூகம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதேவேளை அண்மையில் பல்கலையில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வெசாக் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதன் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
பல்கலையில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்ற பின்னிற்கும் துணைவேந்தர் படையினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றியமை கல்விச் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளையும் கலந்துகொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq4.html
Geen opmerkingen:
Een reactie posten