மலேசியாவில் நிர்வாண கோலத்தில் நடனமாடிய பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் கடந்த மே மாதம் 30ம் திகதி ‘நிர்வாண விளையாட்டு போட்டி 2014’ என்ற பெயரில் பினாங்கு கடற்கரையில் போட்டி ஒன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் என அனைவரும் எந்தவித உடையும் அணியாமல், உடலில் வரைந்த ஓவியத்துடன் நடனம் ஆடியுள்ளார்கள்.
இந்த போட்டி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய பொலிஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 5 மலேசியர்கள், ஒரு சிங்கப்பூர்வாசி என 6 ஆண்கள் கோலாலம்பூர் நீதிமன்றில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், 1,600 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் 3 பெண்கள் உள்பட 4 மலேசியவாசிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பேரை தேடி வருவதாக இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் பொலிஸ் அதிகாரி முகமது ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten