தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அரசியல்வாதிகள்: காரணம் என்ன?

மூன்றாம் உலக போருக்கு வாய்ப்பு: ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை வீரர் ஆரூடம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:41.42 AM GMT ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது தாக்குதல் நடத்திய இலங்கையின் கடற்படை வீரர் விஜித ரோஹன இன்று சாஸ்திரக்காரராக செயற்பட்டு வருகிறார்.
அவரின் கணிப்பின்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் சனி பகவானின் இடப்பெயர்ச்சி காரணமாக உலகின் பல இடங்களிலும் போர் சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது மூன்றாம் உலக யுத்தத்துக்கும் வழிவகுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பூஸாவை சேர்ந்த ரோஹன 1985 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையில் இணைந்தார். இதன்பின்னர் 12 வருட கால சேவையின்போது 1987ஆம் ஆண்டு வரை அவர் யாழ்ப்பாணத்தில் சேவையாற்றினார்.
இதன்போது அவர் வடமாராட்சி மீட்பு போரிலும் பங்கேற்றார்.
குறித்த போரில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டிருந்தபோதும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் உடன்படிக்கை செய்து 13வது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்தியமையை தாம் எதிர்த்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தாம் கொழும்புக்கு மாற்றலாகி ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தபோது அவருக்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்புக்காகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக ரோஹன தெரிவித்தார்.
இதன்போது தாம் ராஜீவ் காந்தியை தாம் தாக்கிய போதும் தமது நிழலை அவர் கண்டுகொண்டமையால் தாக்குதலின் முழுவேகத்தில் இருந்து அவர் தப்பிவிட்டதாக ரோஹன கூறினார்.
இதனையடுத்து இராணுவ நீதிமன்றத்தில் 6 வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட அவர், ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியினால் 1990ஆம் ஆண்டில் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmoz.html
நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் அரசியல்வாதிகள்: காரணம் என்ன?
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:52.34 AM GMT ]
இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் எடுக்கப்படுகின்ற போதும் இதேநிலைமை தொடர்கிறது.
கடந்த 20ஆம் திகதியன்று பல்கலைக்கழகம் தொடர்பான பிரேரணை ஒன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 200 பேர் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இளைஞர் விவகார அமைச்சின் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் 24 உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo0.html

Geen opmerkingen:

Een reactie posten