ஆனால் அதிர்வு இணையம் ரைம்ஸ் ஒப் இந்தியாவை தொடர்புகொண்டு கேட்டபோது, BTF அமைப்பில் உள்ள நிர்மலன் என்பவர் சொன்ன கருத்தையே தாம் எழுதியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் இயங்கிவரும் பாரம்பரிய ஊடகத்தினுள் முன்னணி வகிப்பது ரைம்ஸ் ஒப் இந்தியாவாகும். யார் பேட்டி கொடுத்தாலும் அதனை ரக்காட் செய்து தாம் வைத்திருப்போம் என்றும், தேவைப்பட்டால் அதனை தாம் ஆதாரமாக காட்டுவோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இன் நிலையில் குறிப்பிட்ட பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ள BTF அமைப்பினர், தாம் சொல்லாத கருத்தை பொய்யாக ரைம்ஸ் ஒப் இந்தியா எழுதிவிட்டது என்று கூறுகிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
லண்டனில் 2014 நடந்த மே 18 நினைவு நிகழ்வுகளில் , தமிழீழ தேசிய கொடியை ஒருவரும் கொண்டுவரக் கூடாது என்று BTF உறுப்பினர்கள் சொல்லியிருந்தார்கள். எனினும் இளையோர்கள் அதனை அனுமதிக்கவில்லை. பின்னர்இந்த அமைப்பில் உள்ளவர்கள் தேசிய கொடியை மடித்து வைக்கவேண்டும் எனவும், தமிழீழம் கிடைத்த பின்னரே அதனை பிடிக்கவேண்டும் என்றும் மக்களுக்கு கூறிவருகிறார்கள். ஆனால் இப்போது தமிழீழமே சாத்தியம் இல்லை என்று இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்ற காரணத்தால் , இந்திய அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்க முடியுமா ? எமது அடிப்படை கொள்கையில் இருந்து மாற முடியுமா ? அப்படி மாறி மாறி பேசிவந்தால், இந்த அமைப்பையும் அதன் நிர்வாகத்தில் உள்ளவர்களையும் எவ்வாறு நம்புவது ?
அரசியல் வாதிகள் அடிக்கடி பேட்டி கொடுப்பதும், கொடுத்த பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாக சொல்லிவிட்டால் தாங்கள் அப்படி சொல்லவில்லை என்றும், குறித்த ஊடகம் பொய்யாக எழுதி விட்டது என்று கூறி தப்பித்துக்கொள்வார்கள். இதுவே நடந்தும் முடிந்துள்ளதுபோலவுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன ? கீழே பதிவுசெய்யவும்.
Geen opmerkingen:
Een reactie posten