[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:42.14 PM GMT ]
அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இரவு, கித்துருவன் அணியினரை விட்டு பெண் ஒருவருடன் இரவை கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கித்துருவனுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அல்லது சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணை நடத்தும் என ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் ஊழலுக்கு எதிரான அலுவலர் லச்மன் டி சில்வா அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஒழுங்காற்றுக்குழு அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உட்பட்டவர்களை சந்தித்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
ஏற்கனவே கித்துருவன் இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த வேளையில், அவரை தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியவே மீண்டும் அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் சனத் ஜெயசூரியவின் மீது ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிர்வாகத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmry.html
புலிகளின் பொலிஸ் உறுப்பினருக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வாதத்தால் பிணை
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:57.13 PM GMT ]
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி ஜயபுரத்தைச் சேர்ந்த சிவராசா சீலனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாவது,
1995ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்று சந்தேக நபர் 2009ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியதாகவும்,
யுத்தத்தின் பின்னர் வெளிநாட்டில் வசிக்கும் புலிகள் இயக்க ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும் புலிகள் இயக்கத்தை மீளமைப்பதற்காக 2014ம் ஆண்டு மே மாதம் 23ம்திகதி பிரான்ஸ நாட்டிற்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தற்கு சென்றபோது கைதுசெய்யப்பட்டு விசாரணை நடாத்தப்படுவதாகவும்,
சந்தேக நபர் வெளிநாட்டிலுள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் முதல் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில், சந்தேகநபரான எனது கட்சிக்காரர் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெறுகையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் ஒருவருட புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலையான பின்னர் தனது உறவுகளோடு இணைவதற்காகவே பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற வேளையில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இணைந்து ஆயதப் பயிற்சி பெற்று 2009ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியமைக்காக ஏற்கனவே நீதிமன்றினால் தண்டனையாக ஒருவருட புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார் என்பதனை பொலிசார் தமது அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் புனர்வாழ்வுக் காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படும் பொழுது, இந்த நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என எந்தவிதக் கட்டுப்பாடும் நீதிமன்றினால் விதிக்கப்படவில்லையென்பதுடன், வெளிநாடு செல்வதற்கான சட்டரீதியான ஆவணங்களுடனேயே விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியதாக எந்தவிதமான குற்றச்சாட்டும் பொலிசாரின் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
வெளிநாட்டில் வசிக்கும் புலிகள் இயக்க ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும புலிகள் இயக்கத்தை மீளமைப்பதற்காக சந்தேகநபர் வெளிநாடு செல்ல முனைகின்றார் என்று யாரோ வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
வெளிநாடுகளிலுள்ள உறவுகளோடு தொடர்பு கொண்டதை பொலிசார் தவறாக புரிந்துகொண்டதின் விளைவே இந்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்தமைக்கு காரணமாகும்.
ஏற்கனவே தண்டனை அனுபவித்தவரை எந்தவித நியாயமான காரணமுமின்றி பொலிசார் மீண்டும் கைது செய்துள்ளர.
மேலும் பொலிசார் தமது அறிக்கையில், விசாரணை முடியடையவில்லையென மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக எந்தச் சான்றும் உள்ளதாகக் குறிப்பிடவில்லை என்பதனையும் கவனத்தில்கொண்டு, சந்தேக நபருக்கு பிணை வழங்கும்படி சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டார்.
இதனையடுத்து சந்தேக நபர் ஒரு லட்சம் ருபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmrz.htmlathukkuththaane avar saddaththarani!!
Geen opmerkingen:
Een reactie posten