[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 02:25.48 AM GMT ]
கேர்ணல் மொஹமட் இர்ஷாத் கான் என்பவரே இந்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இதன்போது இலங்கை இராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையில் புதிய முயற்சிகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக இலங்கை இராணுவ இணைத்தளம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் புதிய முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பாகிஸ்தானிய அரசாங்கம் ஆவலுடன் இருப்பதாக உயர்ஸ்தானிகரக புதிய பாதுகாப்பு அதிகாரி இதன் போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns5.html
மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 03:04.37 AM GMT ]
வடக்கு மாகாண சபை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு முதல்வரை சந்திக்க விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த கருத்தக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து விபரித்து கடிதமொன்றை அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம், விக்னேஸ்வரன் அனுப்பி வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பிரதமரின் அழைப்பு கிடைத்தவுடன் தாம் உடனடியாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய ஆயத்தமாக இருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnty.html
அடுத்த மாதத்தில் வடக்கில் யாழ்தேவி கால் பதிக்கும்: சிங்ஹா நம்பிக்கை
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 05:17.14 AM GMT ]
நேற்றைய தினம் அச்சுவேலி தொழிற் பேட்டையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசாங்கத்துடன் இலங்கை மத்திய அரசாங்கமும் வடமாகாண சபையும் இணைந்து செயற்பட்டு, மக்களின் வளமான, சுபீட்சமான எதிர்காலத்திற்காக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அதேவேளை, நாங்களும் இந்திய பிரதிநிதிகள் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையும் எம்முடன் இணைந்து செயற்படும் படி மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
நாங்களும், மக்களின் விடிவுக்காகவும், சுபீட்சத்திற்காகவும் இணைந்து பல செயற்றிட்டங்களை மேற்கொள்வோம். இதனூடாக இலங்கை – இந்திய நல்லுறவு மேலும் மேம்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் யாழ் மத்திய பேருந்து நிலையத்தை பார்வையிட்ட சிங்ஹா கருத்து கூறுகையில்,
அடுத்த மாதமளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு புகைரத சேவை ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்காக மத்திய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்திற்கான புகைரத சேவை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUntz.html
Geen opmerkingen:
Een reactie posten