[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 11:51.25 PM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. எனவே தமிழ் கூட்டமைப்பு தமது யோசனைகளை தெரிவுக்குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
13 வது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரம் வழங்க முடியாது என்பதை தேவையான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளோம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மோடியிடம் எத்தகைய கோரிக்கையும் முன்வைக்கலாம் ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வு ஒன்றினை காணுமாறு மோடி கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ செல்வதை விட தமிழ் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்து தமது யோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
மேலைத்தேய நாடுகள் கை வைத்த எந்த இடத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. இதுவரை நேரடிப் பேச்சுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடவில்லை. அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்றார் அமைச்சர் பிரேம்ஜயந்த.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnr5.html
வவுனியாவில் குடிப்பரம்பலை மாற்ற அமைச்சர் ரிசாத் முயற்சி!- பொதுபலசேனா வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 11:57.11 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த வித்தானஹே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அரசாங்க அதிகாரிகளை கொண்டு தமிழர் நிலங்களில் முஸ்லிம்களை குடியேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது ஏனைய சமூகங்களை அவர் புறக்கணிப்பதாக திலந்த குறிப்பிட்டார்.
இதற்காக அமைச்சர் பலவந்தமாக காணிகளை அபகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று வில்பத்து சரணாலயத்திலும் அமைச்சர் சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொண்டு வருவதாக திலந்த கூறினார்.
இதனைத்தவிர முல்லைத்தீவு, மன்னார், கந்தளாய் போன்ற இடங்களிலும் அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் தொடர்வதாக திலந்த சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வவுனியாவை சேர்ந்த சங்கர் கணேஸ் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக பிரதேச செயலர் தமது சொந்தக்காணியில் தம்மை குடியேற அனுமதி தரவில்லை என்று குற்றம் சுமத்தினார். இதன் காரணமாக தாம் வேறு இடம் ஒன்றில் வசித்து வருவதாகவும் கணேஸ் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்க நடவடிக்கை
பொதுபல சேனா அமைப்பு வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளி;க்கும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியில் பொதுபல சேனா அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை போக்கி, நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கனேடிய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
தமது அமைப்பு தொடர்பில் சில தரப்பினர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக பொதுபல சேனா நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnr6.html
புகலிட கோரிக்கையாளர்களை கம்போடியாவில் குடியமர்த்த முடியாது! கம்போடிய எதிர்க்கட்சி தலைவர்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 12:05.43 AM GMT ]
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை கம்போடியா எதிர்க்கட்சி ஒரு போதும் அங்கீகரிக்கமாட்டாதென அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெயின்ஸி தெரிவித்தார்.
நவுரு தீவு தடுப்பு முகாமில் உள்ள இந்த அகதிகள் ஆயிரம் பேர் கம்போடியாவில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று பல செய்திகள் வெளியானதை அடுத்து கம்போடியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலமாக இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்த நாட்டுக்கு வழங்கும் நிதி கறைபடிந்த உத்தியோகத்தர்கள் கையில் சேரும் எனவும் அந்த நாட்டு மக்களிடத்திலும் பாரிய பிரச்சினையை தூண்டுவதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புகலிட கோரிக்கையாளர்களுக்கு கம்போடியா நாட்டில் வாழ்வதற்கான போதிய வசதிகளும் இல்லை என்பதனால் ஒருபோதும் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும், அரசாங்கம் தனது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் ..
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnr7.html
Geen opmerkingen:
Een reactie posten