தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

கிரிக்கெட் போட்டியால் நேர்ந்த அவலம்! 12 மாணவர்கள் காயம்- வகுப்புக்களைப் புறக்கணித்த பேராதனைப் பல்கலை மாணவர்கள்!

நிறைவேற்று அதிகார முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்!- அமைச்சர் வாசுதேவ
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 12:47.53 AM GMT ]
ஊவா தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின் காரணமாக பேச்சுவார்த்தைக்கு திகதி ஒன்றை ஒதுக்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே தேர்தல்களின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், தேர்தல் மேடைகளில் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnsy.html
ஆளும் தரப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளன: மஹிந்த தேசப்பிரிய
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 01:12.14 AM GMT ]
ஆளும் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக தேர்தல் ஆணையாளா மஹிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நாட்டின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளன.
கூடியளவிலோ அல்லது குறைந்தளவிலோ சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் தேர்தல் நடைபெறும் இரண்டு மாவட்டங்களும் நான் விஜயம் செய்திருந்தேன்.
சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கினேன்.
பிபிலை நகரின் மத்தியில் வேட்பாளர் ஒருவரின் பதாதைகள் இரண்டு சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸமா அதிபர் காமினி நவரட்னவிற்கு அறிவித்தேன்.
இரண்டு பதாதைகளும் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் பதாதைகளை காட்சிப்படுத்தல், சுவரொட்டிடகளை ஒட்டுதல் போன்ற சட்டவிதி மீறல்களில் அநேகமான வேட்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்தத் தவறினால், பொதுமக்கள் நீதிமன்றின் உதவியை நாட முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பொது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns0.html
கிரிக்கெட் போட்டியால் நேர்ந்த அவலம்! 12 மாணவர்கள் காயம்- வகுப்புக்களைப் புறக்கணித்த பேராதனைப் பல்கலை மாணவர்கள்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 01:47.59 AM GMT ]
இந்திய சண்டிக்காரில் இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் ஏற்பட்ட மோதலின் போது 12 மாணவர்கள் காயமடைந்தனர்.
சுவாமி பரமானந்தா கல்லூரியின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மத்தியிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கட் போட்டி இடம்பெற்ற வேளையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவர்களில் ஜம்மு காஸ்மீரை சேர்ந்தவர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
எனினும் அதனை ஏனையவர்கள் ஆட்சேபித்தனர். இதனையடுத்து இரண்டு பிரிவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.
வாய்தர்க்கத்தில் தொடங்கிய சண்டை, பின் வன்முறையில் முடிவடைந்துள்ளது. கம்பு, கல் என்பனவற்றால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து பொலிஸார் வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்த வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடமொன்றை உருவாக்குமாறு கோரி கலஹால சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
கடந்த 21ம் திகதி முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அனுமதியின்றி கொட்டகை ஒன்றை அமைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் பற்றிய விபரங்களை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தரப்பினர் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர் அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து இவ்வாறு மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns2.html

Geen opmerkingen:

Een reactie posten