[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 07:27.50 AM GMT ]
குறித்த போராட்டம் இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
அறவழிப் போராட்டக் குழு நிறுவனர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.
எழுதுமட்டுவாள், மிருசுவில், வரணி, மந்துவில், மட்டுவில், நுணாவில் கைதடி கிழக்கு, கைதடி வடக்கு, கைதடி மேற்கு ஆகிய ஊர்களில் உள்ள சில ஆலயங்களில் உயிர்ப்பலி கொடுப்பதைக் கைவிடக் கோரியே இந்த அறவழிப் போராட்டம் நடைபெறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo6.html
கொட்டகலையில் சுற்றாடல் ஈரநில பூங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 07:47.07 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் செயற்பாட்டுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கிணங்க 25 ஏக்கர் கொண்ட இந்த கொட்டகலை ஈரநிலபரப்பில் நகர அபிவிருத்தி அமைச்சின் 340 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் நீர்த்தேக்கம், உணவகம், இயற்கையை இரசித்தல், வாகன நிறுத்துமிட வசதிகள், சுகாதார வசதிகள் என பல திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்காகவும் மக்களுக்காகவும் இத்திட்டத்தை தான் மேற்கொள்ள தீர்மானித்ததாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நாமல் பெரேரா, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo7.html
வாழ்வதற்கு உகந்த நகரங்களில் கொழும்பு 49 வது இடத்தில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 07:47.14 AM GMT ]
உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான நகரங்களில் கொழும்புக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.
கொழும்பு நகரம் தவிர, தெற்காசிய நாடுகளின் நகரங்களில் நேபாளத்தின் காத்மண்டு மாத்திரமே தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளது.
ஸ்திரத்தன்மை, உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதார சேவை உள்ளிட்ட விடயங்கள் இந்த தரப்படுத்தலின் போது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரம் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlpy.html
ஆங் சான் சூகீ - சந்திரிக்கா மியன்மாரில் சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 08:09.13 AM GMT ]
இந்த நிலையில், மியன்மாரின் நோபல் பரிசு பெற்ற ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூகீயை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சந்தித்துள்ளார்.
யங்கூனில் அமைந்துள்ள ஹொட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது,
ஆங் சான் சூகீயின் கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது சமாதானம் மற்றும் தேர்தல் முறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை பின்பற்றுவதற்கான காலம் இன்னமும் உருவாகவில்லை. அது விரைவில் வரும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
பொது அமைப்புக்கள் வாயிலாக மியன்மாரில் அரசியல் மற்றும் நாட்டுமக்களுக்கு நன்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக தேசிய லீக் கட்சி, சில அரசியல் கட்சிகள் மூலம் இந்த குறைகள் தீர்க்கப்படுகின்றன என்றும் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlpz.html
அழுது புலம்பிய அமைச்சர் சுமேதா! தேற்றிய ஜோன் செனவிரத்ன
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 08:40.29 AM GMT ]
இருதின ரிவிர வார இறுதி சிங்களப் பத்திரிகையின் அரசியல் அலசல் பகுதியில் இது தொடர்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மொனராகலை மாவட்டத்தின் தேர்தல் செயற்பாடுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியான சுமேதா ஜயசேன நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சராக உள்ளார்.
எனினும் அவர் பின்தள்ளப்பட்டு தேர்தல் பொறுப்புகள் அமைச்சர் செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மொனராகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக கட்டிடத்திறப்பு விழா குறித்து அண்மையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அமைச்சர் ஜோன் செனவிரத்ன இதற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கட்டிடம் இரண்டொரு நாளில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும், அமைச்சர் சுமேதாவும் தனியாக உரையாடியுள்ளனர்.
அதன்போது தனது அரசியல் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் சதியொன்று மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சுமேதா அழுது புலம்பியுள்ளார்.
”என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் ஊடகங்களில் வெளிவருகின்றன. விபச்சார விடுதி நடவத்துவதாக எழுதுகின்றார்கள். நான் 25 வருட அரசியல் அனுபவம் உள்ளவள். அரசியலில் முதிர்ச்சி பெற்றவள். அப்படியெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வேனா? என்றெல்லாம் அவர் கண்ணீர் விட்டழுதுள்ளார்.
இதனைக் கேட்ட அமைச்சர் ஜோன் செனவிரத்னவுக்கு கடும் சங்கடம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சர் சுமேதாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி ஜனாதிபதியின் ஆசியுடன் மேற்கொள்ளப்படுவதால், அது குறித்து அவர் எதுவித கருத்தும் வெளியிடவில்லை என்று தெரிய வருகின்றது.
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மொனராகலை மாவட்டத்தை மையமாகக் கொண்டே அரசியல் களத்தில் நிற்கின்றார்.
ராஜபக்ஷ குடும்பத்தின் அடுத்த வாரிசு என்ற வகையில் அவருக்கு ஏனைய அமைச்சர்கள் அனைவரும் கௌரவம் அளித்து, முன்னுரிமை அளிக்கின்ற போதும், அமைச்சர் சுமேதா ஜயசேன மட்டும் அவ்வாறு நடந்து கொள்வதில்லை என்ற குறை ஜனாதிபதி தரப்புக்கு உண்டு.
இதன் காரணமாக அமைச்சர் விமல் வீரவங்ச மூலமாக அமைச்சர் சுமேதா ஜயசேனவுக்கு எதிரான அரசியல் சதியொன்றை ஜனாதிபதி தரப்பு முன்னெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp0.html
Geen opmerkingen:
Een reactie posten