தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

வன்முறைகளை வேடிக்கை பார்ப்பது தவறு: அறிவுரை கூறிய பொலிஸ் மா அதிபர்!



வாவியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 02:51.08 AM GMT ]
வாழைச்சேனை, தியாவட்டுவான் பகுதியில் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ஓட்டமாவடி, மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹீப் ஹனிபா (வயது 30) என அடையாளங் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், ஒரு மனநோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புற கிராமங்களை பலப்படுத்த கூட்டமைப்பு நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்கும் திட்டம் ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது.
அடிப்படை வசதிகள் அற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குறித்த பகுதி மக்களின் வாழ்வாதார தொழிலான சேனைப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் வகையில் சோளம் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தின் சொந்த நிதியில் இருந்து 6500 கிலோ சோளம் விதைகள் எல்லைப்புற கிராமங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நல்லதண்ணியோடை, அடைச்சகல், கண்டியனாறு, கச்சக்கொடி சுவாமிமலை; போன்ற எல்லைக் கிராமங்களுக்கே இவை வழங்கி வைக்கப்பட்டன.
ஒரு ஏக்கருக்கு ஆறு கிலோ வீதம் முதல் கட்டமாக 200 ஏக்கர் செய்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
எல்லைக் கிராம மக்கள் தொடர்பில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும். அந்த மக்களை நாங்கள் வலுப்படுத்தும்போதே எமது எல்லைகள் பாதுகாக்கப்படும்.
இன்று நாங்கள் எல்லைக் கிராமங்கள் தொடர்பில் அக்கறையற்று செயற்படுகின்றோம். வாழ்வாதாரம் இல்லாத மக்கள்,வசதி வாய்ப்புகள் இல்லாத மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தால் அப்பகுதிகளை நாங்கள் இழக்க நேரிடும்.
எனவே எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx5.html
வன்முறைகளை வேடிக்கை பார்ப்பது தவறு: அறிவுரை கூறிய பொலிஸ் மா அதிபர்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:09.40 AM GMT ]
குற்றச் செயல்களின்போது பொலிஸார் அமைதி காக்கக்கூடாது என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான அழுத்தங்களை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதேனும் வன்முறைகள் இடம்பெறும் போது அதனை பொலிஸார் வேடிக்கை பார்க்கக் கூடாது.
இவ்வாறு வேடிக்கை பார்ப்பது கடமை தவறும் செயலாகும்.
நாட்டின் அனைவருக்கும் சட்டத்தை ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
அரசியல் அமைப்பின் 12ம் சரத்தில் பொலிஸாரின் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை உரிய விதத்தில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களுக்கும் சட்டத்தை ஒரே விதமாக அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட சுற்று நிரூபம் ஒன்றின் ஊடாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx6.html

Geen opmerkingen:

Een reactie posten