தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

157 புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் 12 மில்லியன் டொலர் நஷ்டம்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 02:12.50 AM GMT ]
போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் பாதாள உலகக் குழுவினர் இவ்வாறு பொலிஸாரை அச்சுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகள் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வரும் அதிகாரிகள் கடமை முடிந்து வீடு திரும்பும் போது பாதுகாப்பு நோக்கிற்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட சில போதைப் பொருள் வர்த்தகர்கள், சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே செல்லிடப் பேசிகள் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறைச்சாலையில் இருந்து கொண்டே விசாரணை நடத்தும் பொலிஸ் அதிகாரிகளை போதைப் பொருள் வர்த்தகர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
சிறையினுள் எத்தனை சுற்றி வளைப்புக்கள் நடத்தினாலும் சில கைதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகளை வைத்துள்ளனர்.
இதேவேளை, கைதிகள் சிறைச்சாலையில் செல்லிடப் பேசிகளை பயன்படுத்துவதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நாள் தோறும் 20 பேர் உயிரிழப்பு
உரிய முதலுதவி வழங்கப்படாத காரணத்தினால் கொழும்பு மவாட்டத்தில் மட்டம் 20 பேர் நாள் தோறும் உயிரிழக்கின்றனர்.
உரிய முதலுதவி வழங்கப்படாத காரணத்தினால் இருதய செயற்பாடு ஸ்தம்பித்து நாள் தோறும் கொழும்பு மாவட்டத்தில் 20 பேர் அகால மரணமடைகின்றனர் என மருத்துவர் தனஞ்சய புலதெனிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழப்போரில் குறைந்தது பத்து பேருக்கு இருதய துடிப்பு ஸ்தம்பித்து ஆறு நிமிடங்களுக்குள் உரிய முதலுதவிகளை வழங்கினால் உயிர் காக்க முடியும்.
முதலுதவி வழங்குவது தொடர்பில் மக்களுக்கு போதிய அறிவின்மையே இதற்கான காரணமாகும்.
ஏதேனும் விபத்தோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அந்த நோயாளிக்கு முதல் ஒரு மணித்தியாலத்தில் உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி! 10 பேர் காயம்
தலவாக்கலை பத்தனை கெலிஓயா பெருந்தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி 55 வயதான ஒருவர் மரணமானார்.
அதே பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவத்தில் பலியானவராவார். இதனை தவிர 4 பெண்கள் உட்பட்ட 10 பேர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
திருவிழா ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த மக்கள் மீதே குளவிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதேவேளை தமிழர்கள் வாழும் பெருந்தோட்டங்களை தனியார் கையேற்றதன் பின்னர் தேயிலை செடிகளுக்கு மத்தியில் உள்ள புல் பூண்டுகள் சுத்தப்படுத்தப்படாமையை அடுத்தே குளவிகள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக அதன் தாக்குதல்களும் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும்: தமிழக அரசாங்கம் மீண்டும் கோரிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசாங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று புதுடில்லியில் இடம்பெற்ற இந்திய- இலங்கை அதிகாரிகள் மட்டத்தினாலான சந்திப்பின்போது தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் இலங்கை இந்திய மீனவக்கூட்டுக் குழுவின் தலைவர் ராஜாசேகர் வன்றூவிடம் இந்த கோரிக்கையை தமிழக மீன்பிடித்துறை செயலாளர் விஜயகுமார் முன்வைத்தார்.
இதேவேளை பாக்குநீரிணையில் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என்றும் தமிழக அதிகாரிகள் கோரினர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படும் போது அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏற்கனவே போதைவஸ்து குற்றச்சாட்டின் பேரில் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் அப்பாவிகள் என்ற அடிப்படையில் விடுவிக்க  வேண்டும் என்று தமிழக அரசாங்கம் கோரியது.
இதற்கிடையில் கச்சதீவு மீண்டும் கையேற்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அதிகாரிகள் விடுத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms6.html
157 புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் 12 மில்லியன் டொலர் நஷ்டம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:43.25 AM GMT ]
அவுஸ்திரேலியா அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒவ்வொரு தடவையும் சட்டத்தை மாற்றும் போது 12.02 மில்லியன் டொலர்களை வீண் விரயம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலம் இந்தியாவில் இருந்து வந்த 157 பேர் விடயத்தில் இந்த செலவு அதிகரித்துள்ளதாக அகதி அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
நடுக்கடலில் வைத்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முயற்சி செய்தமை புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தியா வரைக்கும் அழைத்து சென்று மீண்டும் அவுஸ்திரேலியா கடல் எல்லைக்கு கொண்டு வந்தமை.
இரவோடு இரவாக விமானம் மூலம் நவ்ரு தீவுக்கு அனுப்பியமை இது போன்ற விடயங்களால் பெருமளவான பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சமூகத்துடன் இணைத்திருந்தால் இந்த செலவானது 10% குறைத்திருக்கலாம் என அந்த அமைப்பு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.
அகதிகள் விடயத்தில் அபொட் அரசாங்கம் அதிகளவிலான பணத்தை வீண் விரயம் செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms5.html

Geen opmerkingen:

Een reactie posten