தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

13வது திருத்தத்தை முறையாக அமுலாக்க வேண்டுமென்பதே இந்திய அரசின் விருப்பம்!- முரளிதர் ராவ்



பாக். விமானப்படை தளபதி- கோத்தபாய சந்திப்பு! பாதுகாப்பை வலுப்படுத்த இணக்கம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 12:41.06 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் விமானப்படை தளபதி தாஹிர் ராபிக் பட் (Tahir Rafique Butt), பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக  கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமானப்படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற மிகவும் சுமூகமான சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து ஆராயப்பட்டன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியுடனும் பேச்சுக்களை மேற்கொண்டார்.
இதன்போது இரு நாட்டு விமானப்படை மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
பயிற்சிகள் மற்றும் துறைசார் விடயங்களில் பாகிஸ்தான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq0.html
13வது திருத்தத்தை முறையாக அமுலாக்க வேண்டுமென்பதே இந்திய அரசின் விருப்பம்!- முரளிதர் ராவ்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 01:33.36 PM GMT ]
இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காது தீர்வு ஏற்படுவதே இந்தியாவின் நிலைப்பாடாகும் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த கொள்கையிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அண்மையில் புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வில் ஆழமான கருத்துப் பரிமாறல்களை இருவரும் மேற்கொண்டனர். இனப் பிரச்சினை தீர்வுக்கு அதிகாரப் பகிர்வின் அவசியம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் இந்த சந்திப்பின் போது எடுத்துரைத்தார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முறையாக அமுல் நடத்த வேண்டுமென்பதே இந்திய அரசாங்கத்தின் விருப்பமாகும் என்று தெரிவித்த அவர், இந்திய அரசு தனது அயல் நாடான இலங்கையுடன் நல்லுறவையே பேண விரும்புவதாகவும் இனப் பிரச்சினை இரு நாடுகளின் உறவுகளுக்கும் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதே புதிய இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை இனியும் இழுபடக்கூடாது என தெரிவித்த தேசிய பொதுச் செயலாளர். அரசாங்கமும் தமிழ் மக்களும் விட்டுக் கொடுப்புடன் முன் வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றார்.
இதன் போது மு.கா.பிரதித்தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை இனப் பிரச்சினை தீர்வில் புறக்கணிக்கப்பட்டதையும் இந்த பிரச்சினை இழுபடுவதற்கு முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கமும் தமிழர் தரப்பும் கரிசனை எடுக்காததே மற்றொரு காரணமென்றார்.
அதன் போது கருத்துத் தெரிவித்த பி.முரளிதர் ராவ் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியா ஏற்கனவே கருத்தில் எடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொருத்தமான, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள் காணப்பட வேண்டுமெனவும் பி.முரளிதர் ராவ் வலியுறுத்தினார்.
இந்த வருடத்துக்குள் இந்த பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான சகல முன் ஆயத்த நடவடிக்கைகளையும் இரண்டு சாராரும் மேற்கொள்வதே விரும்பத்தக்கது என்றார்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீர் அஹமட் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளின் போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதையும் குறிப்பாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் கருத்திலெடுக்கப்படவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.
இது தொடர்பில் முஸ்லிம்களின் அதிக பெரும்பான்மையினரின் ஆணை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் இந்திய அரச தலைவர்களிடமும் , இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்போருடனும் பல தடைவ சுட்டிக்காட்டி இருப்பதையும் தெளிவுபடுத்தினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முக்கிய அமைச்சர் என்ற வகையில் அந்த மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள், குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் மேலும் உதவிகளை வழங்க வேண்;டுமென்றார்.
தமது அமைச்சு முன்னெடுக்கும் கிழக்கு முதலீட்டு அரங்கம் வெற்றிகரமாக செயற்படுவதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பங்களிப்பு செய்யவேண்டும் எனக்கேட்டுக் கொண்ட நசீர் அஹமட் இந்தியாவின் விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை கிழக்கு மாகாணம் பெற்றுக் கொள்ள வழி வகை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது பி.ஜே.பி. ஆரம்ப போராளியும் முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்குபற்றி சிறையில் இருந்த பிரபல வர்த்தக பிரமுகர் சுபாஷ் ஷாண்ட் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq1.html

Geen opmerkingen:

Een reactie posten