தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்

இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது முறுகல்! இரண்டு பேர் காயம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 11:12.30 AM GMT ]
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது முறுகல் நிலை ஏற்பட்டது.
நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மைதானத்துக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைய முற்பட்டபோதே இந்த நிலை ஏற்பட்டது.
இதில் பெரும்பாலானோர் சுவர்களில் ஏறி பார்வையாளர் அரங்குக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். இதன்போது இரண்டு பேர் காயமடைந்தனர்.
இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட போதும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையாக வெளியில் நின்றனர்.
டிக்கெட் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அத்துமீறி செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூடுதல் பொலிஸார் அங்கு வரழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv0.html
தமக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன! தேர்தல் ஆணையாளர் ஒரு ஜோக்கர்!- ஜே.வி.பி குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:15.47 PM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தமது அலுவலகங்கள் மீது இரண்டு மூன்று தடவைகளுக்கு மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
கட்சியின் அலுவலகங்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் ஜே.வி.பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளில் ஜே.வி.பியை இலக்கு வைத்தே ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மொனராகலை படால்கும்புர பிரதேசத்தில் அண்மையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதில் சிலர் காயமடைந்ததுடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையும் சேதமாக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆணையாளர் ஒரு ஜோக்கராக நடந்துக்கொள்கிறார்- ஜே வி பி குற்றச்சாட்டு
மொனராகலை மாவட்டத்தில் தேர்தல் சட்டம் எதுவும் அமுல்செய்யப்படவில்லை.
அங்கு தமது கட்சியினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்..
தேர்தல்கள் ஆணையாளரை பொறுத்தவரையில் அவர் வன்முறைகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
அதற்கு பதிலாக தம்மை ஒரு ஜோக்கராக அவர் ஊடகங்களில் பிரபல்யப்படுத்தி வருகிறார் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் பொலிஸாரின் எண்ணிக்கை போதாது என்று முறைப்பாடு செய்தால்;, பொதுமக்கள் நீதிமன்றத்திடம் சென்று முறையிடலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் கூறுவதாக அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் கையாலாகதவராக நடந்துக்கொள்வதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv2.html
அமைச்சர் பவித்ராவை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரதியமைச்சர்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:19.26 PM GMT ]
மின்வலு எரிசக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தன்னை பகிரங்க கூட்டங்களில் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு அறிவிக்காமல் மின் விநியோக திட்டங்களை ஆரம்பித்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதியிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv3.html

Geen opmerkingen:

Een reactie posten